fbpx

தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்த இளைஞர் மீது ஆசிட் வீசிய இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள பஹதுர்கர் பகுதியில் வசிப்பவர் ஷியாம் சிங் (25). பெற்றோரை இழந்த இவர் சோனிபட் மயூர் விஹாரில் உள்ள தனது அத்தை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு, கோஹானா கிராமத்தை சேர்ந்த அஞ்சலி (23) என்ற பெண்ணுடன் சில நாட்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அஞ்சலி, […]

உலக சந்தைகளில் அமெரிக்க டாலர் 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்ததை அடுத்து தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் ஐரோப்பிய பொருளாதாரத்தை மந்த நிலைக்குள் தள்ளக்கூடும் என்கின்ற காரணத்தினால யூரோ டாலருக்கு இணையாக மதிப்பு இருந்தது. டாலரின் வலிமை மற்ற நாணயங்கள் வாங்குபவர்களுக்கு கிரீன் பேக்- விலை தங்கத்தின் விலையை உயர்த்துகின்றது. இந்தியாவின் டெல்லி, கல்கத்தா, மும்பையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்துள்ளது.. […]

பாலம் விபத்தில் ஒரேவா நிறுவனத்தின் மேலாளர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிபதியிடம் இந்த விபத்து கடவுளின் விருப்பம் என பதில் அளித்துள்ளது மக்களிடையே கோபத்தை தூண்டியுள்ளது. குஜராத் மோர்பி பகுதியில் மச்சு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தொங்கும் பாலம் அறுந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் 141 பேர் உயிரிழந்த நிலையில் 170 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பாலத்தை பராமரித்த ’ஒரேவா’ என்ற […]

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற கோரி ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் மனு அளிக்க திமுக அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமோக வெற்றி பெற்று 2021இல் ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக முக.ஸ்டாலின் பதவியேற்றார். அப்போது, பன்வாரிலால் புரோகித் தமிழக ஆளுநராக இருந்தார். பின்னர் அவர் மாற்றப்பட்டு, மேகாலயா, நாகலாந்து மாநிலங்களில் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநராக மத்திய அரசு நியமித்தது. […]

தமிழகத்தில் அடுத்த வரும் 5ம் தேதி வரை கனமழை விடாது கொட்டித்தீர்க்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகின்றது. இந்த மழை படிப்படியாக அதிகரிக்கும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் அதே போல படிப்படியாக அதிகரித்து மழை கொட்டித்தீர்க்கின்றது. தொடர்ந்து மேலும் 3 நாட்களுக்கு இந்த மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு […]

மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த நாளை ஐப்பசி சதய நட்சத்திரம், ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு 1,037-வது சதய விழா இன்று காலை மங்கல இசையுடன் தொடங்கியது. ​இந்நிலையில், மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் […]

தீபாவளி பண்டிகைக்கு அனுமதியில்லாமல் விடுமுறை எடுத்த சுங்கச் சாவடி ஊழியர் மீது நடவடிக்கை எடுத்ததால், பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் லப்பை குடிக்காடு அருகேயுள்ள சு. ஆடுதுறை கிராமத்தை சேர்ந்தவர் கோபால். இவர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு பிரிவில் ரோந்து வாகனத்தில் உதவியாளராக கடந்த 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், தீபாவளி பண்டிகையைக் குடும்பத்தினருடன் […]

கோவை மாவட்டம் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் ஒன்று நேற்று நடைபெற்றது. இந்த நிலையில் மூதாட்டி ஒருவர் அங்கே வந்திருந்தார். மேலும் அவர் கடந்த 2016-ம் ஆண்டில் மத்திய அரசு செல்லாதது என தெரிவித்த சில பழைய 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை வைத்துக் கொண்டு ஆட்சியர் அலுவலகத்தில் இதனை பற்றி மனு கொடுக்க நேரில் வந்திருக்கிறார். அவரிடம் மொத்தம் ரூ.15 ஆயிரம் […]

பிக்பாஸிடம் ஒரு பெரிய டீல் ஒன்றை பேசியிருக்கிறார் போட்டியாளர் நிவா. பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இதுவரை இருவர் எலிமினேட் செய்யப்பட்டிருக்கிறார்கள். முதல் வாரம் டான்ஸ் மாஸ்டர் சாந்தியும், இரண்டாவது வாரத்தில் அசல் கோலாரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். அசர் கோலார், வீட்டில் செய்த சில கோளாறுகளால் கடுப்பான மக்கள், அவரை வெளியே அனுப்பினர். குறிப்பாக, நிவாஷினி உடன் இணைந்து கொண்டு அசல் கோலார் செய்த லீலைகள் அனைத்தும், 24 மணி நேர […]

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேலைகளில் இந்திய அரசியல் கட்சிகள் பலவும் இப்போதே ஈடுபட துவங்கிவிட்டனர். கூட்டணி பேச்சு வார்த்தைகள், மக்களுக்கான திடீர் அறிவிப்புகள் என்று பரபரப்பு ஏற்பட துவங்கியுள்ளது. இந்த நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டணி வைக்க பல முன்னணி கட்சிகளை மறைமுகமாகவும், நேரடியாகவும் அழைப்பு விடுத்து வருகின்றார். அதன் ஒரு பகுதியாக இன்று அவர் தமிழகத்திற்கும் வர உள்ளார். மேற்குவங்க ஆளுநராக இருக்கும் இல.கணேசன் வீட்டில் நடக்கும் […]