fbpx

ஆன்லைன் விளையாட்டில் பணம் வென்றவர்களுக்கு வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. வருமான வரித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ”கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் ரூ. 58,000 கோடி பரிசு பணம் வென்றுள்ளனர். மேலும், ஆன்லைன் விளையாட்டுகளில் அதிக பணம் ஈட்டியவர்களின் விவரம் வருமான வரித் துறையிடம் உள்ளது. அந்த விவரங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகின்றது. அதனால், அவர்கள் […]

பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என்று காவல் நிலையத்திற்கு மர்ம நபர்கள் கடிதம் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகள் வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு தீ வைக்க மர்ம நபர்கள் முயற்சி செய்தனர். இந்த சம்பவத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த 6 பேரை மேற்கு […]

சட்டம்-ஒழுங்கு பிரச்சனை காரணமாக ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி அளிக்க முடியாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தையொட்டி அக்டோப்ர 2ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி கோரியிருந்தது. சென்னை உயர்நீதிமன்றமும் அதற்கு அனுமதி வழங்கியிருந்தது. முன்னதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கில், ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை எதிர்த்து […]

பிஎஃப்ஐ அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்ததை தொடர்ந்து அந்த அமைப்பின் ட்விட்டர் பக்கமும் நீக்கப்பட்டுள்ளது.. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு நாட்டில் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளித்தல், பயங்கரவாத செயல்களுக்கு ஆட்கள் சேர்த்தல், பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம் ஆகியவற்றில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது.. இதைத் தொடர்ந்து கடந்த 22-ம் தேதி, தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை நாடு முழுவதும் PFI அமைப்புக்கு எதிராக இரண்டு […]

’காட்ஃபாதர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ சமீபத்தில் வெளியான நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘லூசிபர்’. இப்படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்துள்ளனர். இதில், சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். தமிழில், ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், வேலாயுதம், தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற பல படங்களை இயக்கிய மோகன் ராஜா, லூசிபர் திரைப்படத்தை […]

எஸ்பிஐ வங்கி பி.ஒ அதிகாரிகளுக்கான ஆட்சேர்ப்பு 2022 அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எஸ்பிஐ வங்கியில் காலியாக ப்ரோபேஷனரி ஆபிசர் (Probationary Officer) பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.. இந்த பணிகளுக்கான விண்ணப்ப செயல்முறை கடந்த வாரம் தொடங்கியது.. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.. இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி அக்டோபர் 12 ஆகும். இதன் மூலம் 1673 பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது.. காலியிட விவரங்கள் : […]

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து, ரூ.37,440-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் விலை […]

தைரியம் இருந்தால் பீகாரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடை செய்யுங்கள் என்று லாலு பிரசாத் யாதவுக்கு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் சவால் விடுத்துள்ளார்.. ராஷ்ட்ரிய ஜனதா தளம் தேசிய தலைவர் லாலு பிரசாத் யாதவ், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI ) போன்று ஆர்எஸ்எஸ் அமைப்பையும் தடை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். இதுகுறித்து பேசிய லாலு பிரசாத் “PFI போன்றே, RSS அமைப்பையும் தடை செய்ய வேண்டும்.. […]

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இனத்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 4,272 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 27 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 4,474 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]

ஷீலா ராஜ்குமார் நடிப்பில் தமிழ் சினிமாவுக்கு புதிதாக அறிமுகமாகியுள்ளது ‘பட்டாம்பூச்சியின் கல்லறை’ டூ லெட், மண்டேலா திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்றவர் ஷீலா ராஜ்குமார். இவர் நடிப்பில் அறிமுக இயக்குநர் பாக்யா எழுதி, இயக்கியுள்ள ‘பட்டாம்பூச்சியின் கல்லறை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ரூபி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இத்திரைப்படம் பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதில், குழந்தைகளும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீண்ட […]