புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய மருந்துகளை நோயாளிகள் வெளியில் வாங்கிக் கொள்ளுமாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் கோரிமேடு பகுதியில் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக செல்கின்றனர். இந்நிலையில், அனைத்து துறை தலைவர்களுக்கும் மருத்துவ கண்காணிப்பாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், நமது மருத்துவமனையில் தொடர்ந்து மருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, நம்மிடம் கையிருப்பில் […]
சமீப காலமாக நாய்கள் தாக்கும் வீடியோக்கள் பீதியடையச் செய்யும் நிலையில் ’’பிட்புல்’’ நாய் பசுவின் வாயைக்கவ்விய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாவட்டம் கான்பூரில் பசுவை பிட்புல் என்ற வகையைச் சேர்ந்த நாய் தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் பசுவின் தாடைப் பகுதியை கடித்துக்கொண்டிருக்கின்றது அந்த பிட்புல். வலியால் துடிக்கும் மாடு கத்திக் கொண்டே இங்கும் அங்குமாய் நடக்கின்றது. இதைப்பார்த்த பொதுமக்களுக்கு அருகில் செல்லவே முதலில் […]
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. தென்னிந்திய திரையுலகில் பல கிளாசிக் படைப்புகளை வழங்கியதன் மூலம், பல ஆண்டுகளாக சத்யஜோதி ஃபிலிம்ஸ் ஒரு மதிப்பு மிக்க நிறுவனமாக விளங்கி வருகிறது. தற்போது இந்நிறுவனம், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ என்ற புதிய திரைப்படத்தை தயாரிக்கிறது. இப்படம் 1930 – 40களின் பின்னணியில் […]
புதிய வகை வைரஸ் காய்ச்சலால் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அதிகளவில் நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனர். தமிழகம் முழுவதும் தற்போது இன்புளூயன்ஸா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, இந்த வகை வைரஸ் காய்ச்சல் குழந்தைகளை அதிகளவில் பாதிக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்திலும் வைரஸ் காய்ச்சலால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சளி, காய்ச்சல், இருமல் போன்ற பல்வேறு அறிகுறிகளுடன் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினந்தோறும் […]
மனைவியின் மருத்துவ செலவுக்காக பிறந்து 25 நாட்களே ஆன குழந்தையை ரூ.50,000-க்கு தந்தை விற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கர்நாடக மாநிலம் சாமராஜநகர் பகுதியைச் சேர்ந்தவர் பசப்பா (வயது 35). அந்த பகுதியில் ஹோட்டல் தொழிலாளியாக இருக்கும் இவருக்கு, திருமணமாகி 7 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது மனைவி மீண்டும் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்நிலையில், இருதய நோயால் அவதிப்படும் இவரது […]
லண்டனில் ராணியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியின்போது சவப்பெட்டியை நோக்கி ஓடிய இளைஞர் ’’ அவர் உயிருடன் இருக்கின்றாரா’’ என சோதனை செய்தேன் என கோர்ட்டில் பதில் அளித்திருக்கின்றார். லண்டனில் ராணியின் மறைவுக்கு லட்சக்கணக்கான மக்கள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அஞ்சலி செலுத்தினர். இரவும் பகலும் வெயில் மழை என பாராமல் வந்து சவப்பெட்டி முன்பு நின்று தலை வணங்கி மரியாதை செலுத்தினர். கடந்த வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தும் […]
திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா.. செயற்கையான சீனாவைக் காட்டிலும் சுதந்திரமான ஜனநாயக நாடான இந்தியாவில் எனது இறுதிமூச்சு இருக்க வேண்டும் என விரும்புவதாக தெரிவித்துள்ளார். இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவுக்கு திபெத்திய ஆன்மீகத் தலைவரான தலாய்லாமா வந்திருந்தார். அமெரிக்காவின் அமைதி என்ற கல்வி நிறுவனம் (யு.எஸ்.ஐ.பி.) கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில் பங்கேற்ற அவர் கூறுகையில், ’’ இந்தியா சுதந்திரமான ஜனநாயக நாடு. அதில் அன்பான மக்கள் சூழ்ந்துள்ளனர். செயற்கைத்தன்மை […]
தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள ’நானே வருவேன்’ திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. தனுஷ் நடித்துவரும் ‘நானே வருவேன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். மேலும், அவரது சகோதரரும் திரைப்பட இயக்குநருமான செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வருவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. பாலிவுட் நடிகை எல்லி அவ்ராமும் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இப்படத்தை வி கிரியேஷன் சார்பில் கலைப்புலி எஸ் தாணு […]
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற போதுமான இடத்தை தமிழக அரசு கொடுக்கவில்லை என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். காரைக்குடி, சிவகங்கை மாவட்டங்களில் கட்சி மற்றும் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா டெல்லியில் இருந்து மதுரை வந்தார். பின்னர் மதுரை அவனியாபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் பாஜக நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில், […]
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியில் வசிப்பவர் சந்திரா சுப்பிரமணி (72). சந்திராவின் கணவர், கடந்த சில வருங்களுக்கு முன்பு வயது முதிர்வால் இறந்து விட்டார். இதனால் சந்திரா தனது மகன் வடிவேலுவுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மூதாட்டி சந்திரா சிங்கப்பெருமாள் கோவில் இருக்கும் பகுதிக்கு சென்று இருக்கிறார். போவதற்கு முன் தனது மகனிடம் சொல்லி சென்றுள்ளார். இதை தொடர்ந்து, நீண்ட நேரமாகியும் தாய் வீடு […]