”லோக்கல் சரக்கு” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜனுக்கும், நடிகர் செண்ட்ராயனுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நடன இயக்குனர் தினேஷ் மற்றும் யோகிபாபு இணைந்து நடித்திருக்கும் படம் ‘லோக்கல் சரக்கு’. இந்த படத்தை விஜய்யின் சுறா மற்றும் அழகை மலை போன்ற படங்களை இயக்கிய எஸ்.பி.ராஜ்குமார் இயக்க, டிஸ்கவர் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் சுவாமிநாதன் ராஜேஷ் இந்த படத்துக்கு இசையும் அமைத்திருக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் […]
மாடலிங் துறையில் விருப்பம் உள்ள பெண்ணிடம் கவர்ச்சிகரமான புகைப்படத்தை பெற்றுக்கொண்டு ரூ.3 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த ஆண்டு வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் மனு அளித்திருந்தார். அதில், தனக்கு மாடலிங் துறையில் விருப்பம் அதிகமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதாகவும் அப்பொழுது தன்னுடைய தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி ஒன்று வந்ததாகவும் […]
முதலமைச்சர் முக.ஸ்டாலின் குறித்து அவதூறாக போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளரை போலீசார் கைது செய்தனர். கடந்த 11ஆம் தேதி வட சென்னை பகுதியில் பல்வேறு தெருக்களில் தமிழக முதலமைச்சரை அவதூறாக சித்தரிக்கும் வகையில் போலி பத்திரிகை பெயரில் சுவரொட்டிகள் தயாரிக்கப்பட்டு சுவரில் ஒட்டப்பட்டிருந்தன. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகராட்சி மண்டலம், ஐந்தின் உதவி பொறியாளர் ராஜ்குமார், சுவரொட்டியை ஒட்டிய பிலிப்ராஜ் என்பவரை பிடித்து […]
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தக்கூடிய காப்பீட்டு திட்டங்களில் தமிழகம் முன்னோடியாக விளங்குவது மத்திய அரசின் சுகாதார செலவு கணக்கு ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசால் கடந்த 2009-ம் ஆண்டு கலைஞர் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தத் திட்டம் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. […]
பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு முதல் சுற்றுக்கு கட்டணம் செலுத்த இன்று கடைசி நாள் ஆகும். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 431 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு 1,48,811 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆகஸ்ட் 20ஆம் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக நடைபெற்ற சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் 668 பேருக்கு கல்லூரிகள் ஒதுக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, பொதுப் பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 10ஆம் தேதி தொடங்கி நடைபெற்று […]
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.37,120-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் விலை […]
நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி விமர்சிப்பதன் மூலமும், முகம் சுளிக்க வைக்கும் கருத்துகளை தெரிவிப்பதன் மூலமும் அவ்வப்போது பயில்வான் ரங்கநாதன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.. எம்.ஜி.ஆர் முதல் ரஜினி, கமல், தொடங்கி இளம் நடிகைகள், நகைச்சுவை நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் விமர்சித்தும் வருகிறார்.. ஒரு தரப்பினர் பயில்வான் ரங்கநாதன் பேசும் வீடியோக்களை அதிகமாக பார்த்தாலும், மற்றொரு தரப்பினர் பயில்வானை கண்டித்தும் வருகின்றனர்.. மேலும் […]
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், 2-வது ஆட்டம் கேன்டர்பரி நகரில் நேற்று நடைபெற்றது. […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 5,443 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 26 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 5,291 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]
தனியார் நிறுவன ஊழியர்களிடம் தகாத வார்த்தையில் பேசி, மிரட்டல் விடுத்த திமுக தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவைச் சார்ந்த தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா. இவர் கடந்த 2006 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் தாம்பரம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் கடந்த 2021ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற […]