இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 5,443 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 26 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 5,291 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]
தனியார் நிறுவன ஊழியர்களிடம் தகாத வார்த்தையில் பேசி, மிரட்டல் விடுத்த திமுக தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவைச் சார்ந்த தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா. இவர் கடந்த 2006 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் தாம்பரம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் கடந்த 2021ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற […]
காங்கிரஸ் கட்சியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், கட்டாய மதமாற்ற தடை மசோதாவை கர்நாடக அரசு சட்டப் பேரவையில் நிறைவேற்றியது. கர்நாடகா அரசு, கட்டாய மத மாற்ற தடை மசோதாவை அறிமுகம் செய்ய உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்த மசோதாவை சட்டமன்றக் குழு கடந்த வாரம் அனுமதித்தது. இந்நிலையில் கட்டாய மதமாற்ற மசோதா நேற்று அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. […]
நியாயவிலைக் கடைகளில் ரேஷன் பொருட்கள் வாங்காதவர்கள் கௌரவ அட்டையை வாங்கி வைத்து கொள்ளலாம் என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் கல்லுக்குழி பகுதியில் உள்ள நியாயவிலை கடையில், தமிழ்நாடு கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அங்கு ரேஷன் பொருள் விநியோகம் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்த அவர், ரேசன் பொருட்கள் தேவையில்லை என்றால் அவர்களுக்கு கெளரவ அட்டை என்கிற முறை உள்ளது என்றார். இதனை […]
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. மொஹாலியில் நடைபெற்ற முதல் போட்டியில், டாஸ் வென்ற ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி பௌலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பேட்டிங்கில் […]
தங்கள் துணையுடன் தனி அறையில் 2 மணி நேரம் செலவிட கைதிகளுக்கு அனுமதி அளிக்கும் முன்முயற்சி திட்டமாக பஞ்சாப் அரசு அறிமுகம் செய்துள்ளது. பஞ்சாப் சிறைத்துறையின் இந்த முடிவு குறித்து சிறைத்துறை அதிகாரி ஒருவர் வெளியிட்ட தகவல்: பஞ்சாப் சிறைகளில் உள்ள கைதிகள் தங்கள் மனைவி அல்லது கணவருடன் தனி அறையில் 2 மணி நேரம் செலவிட அனுமதி அளிக்க சிறைத் துறை முடிவு செய்துள்ளது. நன்னடத்தை கொண்ட கைதிகளுக்கு […]
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் செப்டம்பர் 20-ம் தேதியிட்ட அறிவிக்கையின்படி, அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்கள் தொடர்பான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பரிந்துரைக்கப்பட்ட விதிகளை நடைமுறைப்படுத்தும்போது, இந்த அமைச்சகம் மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவினரால் சில விஷயங்கள் அடையாளம் காணப்பட்டன.புதிய விதிகள் பின்வரும் முக்கிய அம்சங்களுடன் ஓட்டுநர் பயிற்சி மையங்களின் செயல்பாட்டை மேலும் நெறிப்படுத்தும். அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சி மையங்களின் அங்கீகாரத்தைப் புதுப்பித்தல் ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.இரு சக்கர […]
ஒரு நாளைக்கு சுமார் 1612 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதன் மூலம் ஒரே ஆண்டில் தனது சொத்து மதிப்பை கெளதம் அதானி இரட்டிப்பு ஆக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி சமீபத்தில் உலகப்பணக்காரர் பட்டியலில் 2-ம் இடத்திற்கு முன்னேறினார்.. இது ப்ளூம்பெர்க் பட்டியலின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதானி குழுமத்திற்கு சொந்தமான பங்குகளின் விலை அதிகரித்ததால் அவரின் சொத்து மதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸை […]
முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு/ கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்களை ஈடுபடுத்தவிருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் கீழ்காணும் தகுதியை பெற்றிருப்பின் எண் 2, சிவஞானம் சாலை, தியாகராய நகர், சென்னை 600017 இல் (பாண்டி பஜார் அருகில்) உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில் 29.09.2022 அன்று 10.00 மணிக்கு நடைபெற […]
எஸ்பிஐ வங்கி பி.ஒ அதிகாரிகளுக்கான ஆட்சேர்ப்பு 2022 அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எஸ்பிஐ வங்கியில் காலியாக ப்ரோபேஷனரி ஆபிசர் (Probationary Officer) பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.. இந்த பணிகளுக்கான விண்ணப்ப செயல்முறை இன்று தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.. இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி அக்டோபர் 12 ஆகும். இதன் மூலம் 1673 பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது.. காலியிட விவரங்கள் […]