fbpx

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 20,528 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 49 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 17,790 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த […]

ஆபத்தை உணராமல் காவிரி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 3 இளைஞர்கள் பெரும் போராட்டத்துக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர். சேலம் மாவட்டம் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடி எட்டியதை அடுத்து, உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய நிலையில், ஆபத்தை உணராமல் 3 இளைஞர்கள் ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்று செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர். ஆனால், சில நிமிடங்களில் நீர்வரத்து அதிகரித்ததால், பாறையின் மீது […]

கணவரை பிரிந்ததும் தாலிச் சங்கிலியை கழற்றி விட்டது கூட, கணவரை மனரீதியாக துன்புறுத்துவதற்கு சமம் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ஒருவர் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ’என் மனைவி அரசுப் பள்ளி ஆசிரியையாக உள்ளார். எனக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி, அவர் என்னை மனரீதியாக துன்புறுத்தி வருகிறார். எனவே, […]

தமிழ்நாடு தபால் அலுவலகத்தில் காலியாக உள்ள STAFF CAR DRIVER பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என பல்வேறு காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 57 க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையின் 3 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும். மேலும் பணிக்கு கல்வித்தகுதியாக அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிலையத்தில் […]

எஸ்.சி.பிரிவு தலைவர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு தலைவராக செல்வப்பெருந்தகை கடந்த 8 ஆண்டுகளாக பொறுப்பில் இருந்து வந்தார். இந்நிலையில், அவரது பதவிக்காலம் முடிந்த நிலையில், கே.எஸ்.ஆழகிரியின் ஆதரவாளரான ரஞ்சன்குமார் தமிழக காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மாநில எஸ்.சி. பிரிவில் பொறுப்பில் […]

சந்திராயன் – 3 செயற்கைக்கோள் இரண்டு ஆண்டுகளில் விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணு பிள்ளை தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் கா.மு.சுப்பராய முதலியார் அரசு மேல்நிலைப்பள்ளியில், தியாகம் போற்றுவோம் அமைப்பு சார்பில், 75-வது சுதந்திரதின அமுதப் பெருவிழா நடைபெற்றது. இதில் 75-வது பிறந்தநாள் கொண்டாடும் இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணு பிள்ளை பங்கேற்று, மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், ”இந்தியாவின் வளர்ச்சியும், வல்லரசாக கூடிய தன்மையும் அதிகமாகியுள்ளது. மாணவர்களின் அறிவுத்திறமை […]

காகித கலை பயிற்சியை கற்பிக்க வட இந்திய பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை பள்ளிக்கல்வித்துறை ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து ராமதாஸ்  வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காகிதக் கலைப் பயிற்சி அளிக்க டெல்லி உள்ளிட்ட வட இந்தியாவைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. பயிற்சியாளர்களுக்கு தமிழில் பேசவோ, எழுதவோ வராது. பயிற்சியாளர்களால் […]

பாராசின் ஓபன் செஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். செர்பியாவில், பாராசின் ஓபன் செஸ் தொடர் நடைபெற்றது. மொத்தம் ஒன்பது சுற்றுகள் கொண்ட இந்தத் தொடரில் 7 வெற்றி, 2 ‘டிரா’ உட்பட 8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ரஷ்யாவின் அலெக்சாண்டர் பிரெட்கே, 7.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்தார். கஜகஸ்தானின் அலிஷர் சுலேமெனோவ், இந்தியாவின் முத்தையா தலா […]

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யாவிட்டால், திமுக அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை அதிமுக முன்னெடுக்கும் என்று கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து அதிமுக அரசு சட்டம் இயற்றியது. திமுக அரசு நீதிமன்றத்தில் முறையாக வாதாடாமல் இருந்ததால், தீர்ப்பு ஆன்லைன் சூதாட்டம் நடத்தும் நிறுவனங்களுக்கு சாதகமாகியுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதியரசர் குழு அறிக்கை அளித்த […]

தமிழ்நாட்டில் அதிமுக, திமுகவுக்கு மட்டும் தான் ஆட்சி செய்ய திறமை இருக்கிறதா? என கேள்வி எழுப்பிய அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டை ஆளும் தகுதி உடைய ஒரு கட்சி பாமக தான் என கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கி 34ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு மேடையில் பேசிய அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், ”மற்ற கட்சிகள் எல்லாம் யாரோ துவங்கி, தற்போது வழி […]