பதவி உயர்வு கொடுக்கவில்லை என தனது முதலாளியையும் அவரது குடும்பத்தையும் சுட்டுக் கொன்ற நபரை 8 ஆண்டுகள் கழித்து அமெரிக்க போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் ஹுஸ்டன் பகுதியில் கடந்த 2014ல் ஜனவரி 30ம் தேதி சம்பவம் நடந்தது. மோய்யி சன் (50), மேக்சி சன் (49) , டிமோதி சன் (9) டைடஸ் சன் (7) ஆகிய நான்கு பேரும் அவர்களின் வீட்டில் தனித்தனி அறைகளில் துப்பாக்கி குண்டு பாய்ந்து […]
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா விண்வெளியில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு உலகின் சக்தி வாய்ந்த தொலை நோக்கியாக கருதப்படும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை விண்ணுக்கு அனுப்பியது. விண்ணில் நிலை நிறுத்தப்பட்ட பின் இதுவரை காணாத ஆதி பிரபஞ்சத்தின் புகைப்படங்களை படம்பிடித்து அனுப்பி உலக நாடுகுளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஜேம்ஸ்வெப் தொலைநோககி அதன் பிறகு ஆரோராக்களுடன் கூடிய வியாழன் கோளின் வித்தியாசமான புகைப்படங்களை அனுப்பியது. இன்னும் பல புகைப்படங்களை புவிக்கு […]
அமெரிக்காவில் தீ விபத்து குறித்து உரிய நேரத்தில் எச்சரிக்கை விடுத்து 6 பேரின் உயிரை அலெக்சா கருவி காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் வசித்து வந்தனர். நள்ளிரவில் வீட்டில் இருந்த அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். 2 மணி அளவில் வீட்டில் திடீரென தீப்பிடித்துள்ளது. குடும்ப உறுப்பினர்கள் யாரும் கவனிக்கவில்லை என கூறப்படுகின்றது. வீட்டை சூழ்ந்து […]
தெற்கு ரயில்வே அதிகாரிகள் வழித்தடங்களில் தண்டவாளம் உறுதியாக உள்ளதா என்பது உள்பட பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். ரயில்களின்வேகத்தை அதிகரிப்பதால் பயணிகளுக்கு பயண நேரம் குறையும். எனவே தெற்கு ரயில்வே அதிகாரிகள் தண்டவாளங்கள் எவ்வளவு உறுதித் தன்மையோடு உள்ளது என்பது குறித்து ஆராய்ச்சி நடத்தியது. சிக்னல் முறையை மேம்படுத்துதல் , வேகக் கட்டுப்பாடுகளை நீக்குதல் , பாலங்களை சீர் செய்தல் போன்ற சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றது. இந்த நப்பு நிதியாண்டில் […]
நகைச்சுவை மூலமாக மக்களை சிரிக்க வைத்த நடிகர் போண்டாமணி , தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்து பரிதாப நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. சென்னையில் நகைச்சுவை நடிகர் போண்டா மணி ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து படத்தில் நடித்துக் கொண்டிருந்த அவர் சமீபத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தற்போது உதவிக்கு யாருமே இல்லை என அவர் கதறி அழுகின்றார். இது தொடர்பாக அவர் கூறுகையில் […]
மிகப்பெரிய ஐ.டி.நிறுவனமான விப்ரோ 300 பணியாளர்களை வேலையில் இருந்து அதிரடியாக வெளியேற்றியுள்ளது. விப்ரோவின் போட்டி நிறுவனங்களுடன் ஐடி பொறியாளர்கள் வேலை பார்ப்பதாக நிறுவன அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. கொரோனாவின்போது நிறைய ஐ.டி. நிறுவனங்கள் வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கும் திட்டத்தை கொண்டு வந்தது. இதனால் அனைவருக்கும் பாதுகாப்பாக பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சிலர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு இந்த நிறுவனத்திலும் வேலை பார்த்துக் கொண்டு சம்பளம் […]
நடிகர் அஜித்தின் ‘ஏகே 61’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ‘வலிமை’ படத்தைத் தொடர்ந்து, ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் ‘ஏகே 61’. இப்படத்தில் மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், அஜய், சிபி சந்திரன், சமுத்திரக்கனி, மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சென்னை, ஹைதராபாத், விசாகப்பட்டிணம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மிக நீண்ட நாட்களாக […]
உத்தரபிரதேசத்தில் 4 இளைஞர்கள் கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு 15 வயது சிறுமியை தெருவில் நிர்வாணமாக அனுப்பி வைத்த கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரபிரதேசத்தில் மொராதாபாத்மாவட்டத்தில் போஜ்பூரைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. கடந்த செப்டம்பர் 1ம் தேதி பக்கத்து கிராமத்தில் உள்ள ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த 4 இளைஞர்கள் சிறுமியை மிரட்டி ஆடையை களைந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் 4 பேரும் ஆடையை கொடுக்காமல் […]
மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி குமாரபாளையம் விசைத்தறி உரிமையாளர்கள் 27ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். தமிழக மின்சார வாரியம் மின் கட்டண உயர்வை அறிவித்துள்ளது. இதன் காரணமாக அனைத்து தொழில்துறையினரும் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், ஜவுளி உற்பத்தி சார்ந்த விசைத்தறி தொழில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், தமிழகம் முழுவதும் விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் […]
”அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ளதால், கட்சியின் லெட்டர் பேட் மற்றும் முத்திரையை அவர் பயன்படுத்த முடியாது” என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். அதிமுக கட்சி விதிகளை திருத்தியதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது தொடர்பான மனுவை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் முன்னாள் அமைச்சரும், எம்பி-யுமான சி.வி.சண்முகம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை கடந்த ஜூலை 13ஆம் தேதி சமர்பித்தோம். 2,456 […]