fbpx

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்கவிழாவில் அவசியம் பங்கேற்க வேண்டும் என்றும் பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.. சர்வதேச செஸ் போட்டியான, செஸ் ஒலிம்பியாட் முதன்முறையாக இந்த ஆண்டு சென்னையில் நடைபெற உள்ளது.. 2022-ம் ஆண்டுக்கான ஏலத்தில் வென்றதன் மூலம் சென்னையில் இந்த போட்டி நடைபெற உள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் ஜூலை மாதம் 27ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வரை  நடைபெற இருக்கிறது. […]

காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடியை வயது காரணமாக பிரித்து வைத்ததால், மனமுடைந்த இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாசரேத், சின்னமாடன் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் தாசன். இவரது மகன் விஜய் (வயது 17). தாசன் பனைமரம் ஏறும் தொழில் செய்து வருகிறார். இதே ஊரில் வசித்து வருபவர் சுடலைமணி. இவரின் மகள் மேகலா (வயது 16). இருவரும் […]

கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலினிடம் பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரித்தார்.. கடந்த 12-ம் தேதி மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் தொடர் குறித்து முக.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. பின்னர், அவர் வீடு திரும்பியபோது உடற்சோர்வு இருந்ததாகவும், பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.. இதையடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டரில் தகவல் தெரிவித்திருந்தார்.. மேலும், அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, […]

பிரதமர் மோடி சென்னை வந்தால், அவரை நேரில் சந்தித்துப் பேச ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராகக் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, கட்சியில் அதிரடி நியமனங்களையும், நீக்கங்களையும் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள், ரவீந்திரநாத், ஜெயபிரதீப் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களான வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் கட்சிக்குக் களங்கமும், அவப்பெயரும் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் அவர்கள் அதிமுகவின் அடிப்படை […]

நடிகர் விஜய் கடந்த 2005-ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து BMW X5 காரை ரூ.63 லட்சத்திற்கு இறக்குமதி செய்திருந்தார்.. இந்த காருக்கு நுழைவு வரி செலுத்த தமிழக அரசு வணிக வரித்துறை உத்தரவிட்டது.. இதை எதிர்த்து நடிகர் விஜய் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. இந்த வழக்கில் நுழைவு வரி வசூலிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்று நீதிமன்றம் தெரிவித்தது.. இதையடுத்து ரூ.7,98,075 நுழைவு வரி விஜய் தரப்பில் செலுத்தப்பட்டது.. ஆனால் […]

பள்ளி, கல்லூரி மாணவர்களை பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்காமல் இறக்கிவிடும் நடத்துநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளி மாணவர்கள் சீருடை அல்லது கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வைத்திருந்தால், அந்த மாணவர்களை நடத்துநர்கள் பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கல்வி ஆண்டு தொடக்கத்திலேயே போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியிருந்தார். மேலும், நடப்பு ஆண்டு பேருந்து பயண அட்டை வழங்கும் வரை இது […]

சாதிக் கொடுமைகளுக்கு எதிராக போராடிய பெரியார் பெயரில் உள்ள பல்கலை.யில் சாதி குறித்து தேர்வில் கேட்கப்பட்டது மன்னிக்கவே முடியாது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த முதுகலை வரலாறு மாணவர்களுக்கான இரண்டாவது செமஸ்டர் தேர்வில், தமிழகத்தில் எது தாழ்ந்த சாதி? என்கிற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. செமஸ்டர் தேர்வில் கேட்கப்பட்ட இந்த கேள்வியால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக […]

வரி ஏய்ப்பு மற்றும் பணமோசடி தொடர்பான புகார்களுக்கு மத்தியில் இந்தியாவை விட்டு வெளியேறிய பிரபல தொழிலதிபர் லலித் மோடி, லலித் மோடி 2010 முதல் லண்டனில் இருந்து வருகிறார்.. இந்நிலையில் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், நடிகையும், முன்னாள் உலக அழகியுமான சுஷ்மிதா சென் உடனான தனது உறவு நிலையை லலித் மோடி அறிவித்தார்.. அவரின் பதிவில் “மாலத்தீவு உள்ளிட்ட பல இடங்களின் உலக சுற்றுப்பயணத்திற்குப் பிறகு லண்டனுக்குத் திரும்பி […]

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ. 37,088-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென […]

பிரபல நடிகரும், திரைப்பட இயக்குனருமான பிரதாப் போத்தன் காலமானார்.. அவருக்கு வயது 69. வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தை கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள், வாழ்வே மாயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.. தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் பிரதாப் போத்தன் நடித்துள்ளார்.. வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டன், சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட பல படங்களை பிரதாப் போத்தன் இயக்கி உள்ளார்.. […]