fbpx

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ’வாரிசு’ படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகி ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் ’பீஸ்ட்’ திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. இருந்தாலும் வசூலை பொறுத்தவரை வெற்றிப்படமாகவே அமைந்தது. இதையடுத்து, பீஸ்ட் படத்தில் விட்டதை அடுத்த படத்தில் […]

சென்னையில் திமுக பிரமுகரை ரவுடி பெண் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரத்தை அடுத்த எட்டியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ் (35). திமுக பிரமுகரான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரவுடியான லோகம்மாள் (43) என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று மாலை வழக்கம் போல் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த பெண் ரவுடி லோகம்மாள், […]

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து, ரூ.37,120-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் விலை […]

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேமிப்பு (IPPB) கணக்கு வைத்திருப்பவர்கள், பல்வேறு தபால் அலுவலக திட்டங்களில் சுகன்யா சம்ரித்தி கணக்கு (SSA), தொடர் வைப்புத்தொகை (RD), பொது வருங்கால வைப்பு நிதி (PPF) போன்ற அடிப்படை செயல்பாடுகளை தங்கள் வீடுகளில் இருந்தே வசதியுடன் மேற்கொள்ளலாம். இந்தத் திட்டங்கள் மற்றும் பிற செயல்பாடுகளுக்கான பிரீமியங்களை IPPB மொபைல் ஆப் மூலம் மேற்கொள்ளலாம். IPPB மூலம் ஒருவர் தங்கள் பேலன்ஸையும் எளிதாக சரிபார்க்கலாம், […]

ஆதார் அட்டை என்பது தற்போது நம் வாழ்வில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது. அனைத்து உத்தியோகபூர்வ நோக்கங்களுக்காகவும் 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண் இப்போது தேவைப்படுகிறது. அரசாங்கத் திட்டங்களைப் பெறுவது, வங்கிக் கணக்கு தொடங்குவது, ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிப்பது, வேலைகளுக்கு விண்ணப்பிக்க மொபைல் அல்லது இணைய இணைப்பு பெறுவது போன்றவற்றிலிருந்து அடையாளத்தைக் கண்டறிய ஆதார் எண் அவசியம். ஆதார் அட்டையில் உங்கள் பெயர், பிறந்த தேதி, தொடர்பு எண், […]

தனுஷின் ’கேப்டன் மில்லர்’ படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் தனுஷ் படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களையும், நல்ல கதைகளையும் தேர்ந்தெடுத்து கோலிவுட்-பாலிவுட்-ஹாலிவுட் வரை ஆகச்சிறந்த நடிகராக தடம் பதித்து வருகிறார். இவர் நடிப்பில் இந்த ஆண்டில் (2022) மாறன், The Grey Man மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகிய 3 திரைப்படங்களில் இதுவரை வெளியாகியுள்ளன. அந்த வரிசையில் 4-வது திரைப்படமாக நீண்ட இடைவெளிக்குப் […]

திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் விலகுவதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிவித்துள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள விளக்க குறிப்பில்; 2009 இல்‌ எனது நாடாளுமன்ற உறுப்பினர்‌ பணி காலம்‌ நிறைவு பெற்றதற்கு பிறகு மீண்டும்‌ தேர்தலில்‌ போட்டியிடாமல்‌, கட்சிப்‌பணிகளை மட்டும்‌ மேற்கொள்வது என்ற எனது முடிவை தலைவர்‌கலைஞர்‌ அவர்களிடமே தெரிவித்துவிட்டேன்‌. தலைவர்‌ கலைஞர்‌ மறைவுக்குப்பின்‌. அவர்களின்‌விருப்பத்தின்படி தலைவர்‌ தளபதி அவர்களை முதலமைச்சர்‌ ஆக்கும்‌.நோக்கத்துடன்‌ கழகப்‌ பணிகளை மட்டும்‌ […]

சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிகர் சூர்யா 5 வேடங்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா – சிறுத்தை சிவா படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முழுக்க முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் வெளிவரும் இப்படத்தில் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்திருப்பதை மோஷன் போஸ்டர் வழியே அறிய முடிகிறது. இதில், நிறைய VFX காட்சிகள் இருப்பதாகவும், இத்திரைப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது. இயக்குநர் சிறுத்தை சிவாவின் […]

ராகேஷ் இயக்கத்தில் ராமராஜன், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கும் ‘சாமானியன்’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு ராமராஜன் நாயகனாக கம்பேக் கொடுக்க இருக்கும் இந்தப் படம் ராமராஜன் நடிக்கும் 45-வது படமாக உருவாகிறது. இந்த டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ராமராஜன், “ராதாரவி அண்ணனுடன் இது எனது 4-வது படம். எம்.எஸ்.பாஸ்கர் நான் உதவி இயக்குநராக இருந்த காலத்தில் இருந்தே பழக்கம். அவர்கள் […]

தென்மேற்கு பருவமழை இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. செப்டம்பர் 17ம் தேதி நிலவரப்படி, எட்டு மாநிலங்கள் மழைப்பற்றாக்குறையைப் பதிவு செய்துள்ளன. இந்த மாநிலங்களில் பஞ்சாப், டெல்லி, உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், திரிபுரா, மிசோரம் மற்றும் மணிப்பூர் ஆகியவை அடங்கும். தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் வரை நான்கு மாதங்கள் நீடிக்கும். இந்தக் காலக்கட்டத்தில் ஆண்டுக்கு 70 […]