fbpx

எட்டப்பர்களை வைத்து அதிமுகவை வீழ்த்த நினைத்தால் அது நடக்காது என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து சென்னை வானகரத்தில் கடந்த 11-ம் தேதி பொதுக்குழு நடைபெற்றது. நடந்த பொதுக்குழுவில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் அங்கு இயற்றப்பட்ட சிறப்பு தீர்மானத்தின் மூலம் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் […]

கொரோனா தொற்றின் முடிவு நாம் நினைக்கும் அளவுக்கு அருகில் இல்லை என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. கொரோனா தொற்றின் தாக்கத்தில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், தொற்று முடிவுக்கு வருவது என்பது நாம் நினைக்கும் அளவுக்கு அவ்வளவு அருகில் இல்லை என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையில் மக்கள் கொரோனா தொற்றைக் கடந்து வருகின்றனர். ஆனால், மக்களை அடிக்கடி அச்சுறுத்தும் […]

இரவில் இயங்கும் கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்களை மூடுமாறு காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் வற்புறுத்தக் கூடாது என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947-ன்படி 10க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியமர்த்திய கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 × 7 அனைத்து நாட்களிலும் இயங்கலாம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றமும் […]

நீட் இளநிலை தேர்வை ஒத்திவைக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எம்.பி.பி.எஸ் / பி.டி.எஸ் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.. நாடு முழுவதும் உள்ள தனியார், அரசு மருத்துவ கல்லூரிகள் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்பையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அந்த வகையில் நடப்பாண்டு இளங்கலை மருத்துவத்தில் சேருவதற்கான தேசிய தகுதி […]

நாட்டில் அவசரநிலையை பிறப்பிக்கும் அதிகாரம் ரணில் விக்ரமசிங்கேவுக்கு இல்லை என்று இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, அதிபருக்கான கடமையை நிறைவேற்ற இயலாத நிலையில், பிரதமரான ரணில் விக்ரமசிங்கே செயல் அதிபருக்கான அதிகாரத்தை பெற்றிருப்பதாகவும், எனவே, செயல் அதிபர் என்ற முறையில் நாட்டில் அவசரநிலை பிரகடனத்தை பிறப்பித்திருப்பதாகவும், கொழும்பு மாநகரை உள்ளடக்கிய நாட்டின் மேற்கு மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருப்பதாகவும் ரணில் விக்ரமசிங்கேவின் […]

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் பகுதியில் வசித்து வருபவர் 18 வயது இளம் பெண். இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அந்த மாணவி தினமும் கல்லூரிக்கு சென்று வரும்போது, உளுந்தூர்பேட்டை, உளுந்தாண்டார் கோவில் பகுதியில் வசித்து வரும், பழனி என்பவர் மகன் சுதாகர் (26), அந்த மாணவிக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதை தொடர்ந்து, மாணவி ஒரு நாள் கல்லூரிக்கு சென்று […]

சென்னை பல்லாவரம் அருகே பொழிச்சலூர் பகுதியில் வசித்து வருபவர் பாண்டியன். இவர் நாகல்கேணி மீன் மார்க்கெட்டில் வேலை பார்த்து வருகிறார். பாண்டியனும் அதே மீன் மார்க்கெட்டில் வேலை செய்யும் சிரஞ்சீவி என்பவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஒன்றாக சேர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பாண்டியன் சிரஞ்சீவியின் வீட்டிற்கு சென்று, சிரஞ்சீவியின் மனைவி பவானியை கெட்ட […]

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, இன்று வட தமிழகம்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ […]

தனியார் பள்ளியில் படித்து வரும் ஐந்து வயது சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த ஒருவரின் ஐந்து வயது மகள் பெரும்பாக்கத்தில் உள்ள, தனியார் பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் திடீரென சிறுமி பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று அழுது அடம் பிடித்துள்ளார். இந்நிலையில் நேற்று சிறுமியின் பெற்றோர் சிறுமியை பள்ளிக்கூடம் போகுமாறு வற்புறுத்தியுள்ளனர். […]

தமிழக அரசின் மாநில கல்வி கொள்கையை உருவாக்க, கல்வியாளர்கள், வல்லுனர்கள் அடங்கிய மாநில அளவிலான குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, மாநில கல்வி கொள்கையை உருவாக்க ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவில் பல நிலை பேராசிரியர்களும், கல்வியாளர்களும் இடம்பெற்றுள்ளனர். அனைவருக்கும் உயர் கல்வி, தேர்வு முறைகளில் சீர்திருத்தம் போன்ற பத்து […]