fbpx

யூடியூபர்கள் ஜிபி முத்து மற்றும் TTF வாசன் மேற்கொண்ட ஆபத்தான பைக் பயணம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Twin Throttlers என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் TTF வாசன் பைக்கில் பயணம் செய்வதை வீடியோவாக போடுவது வழக்கம். அதுமட்டுமின்றி, பைக்கில் வேகமாக செல்வது, ஸ்டன்ட் செய்வது, ரேஸ் செய்வது போன்றவற்றை இவர் வீடியோவாக பதிவிட்டு வருகிறார். சாலை விதிகளை மீறுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக இவர் மீது […]

கரூர் மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜ.க.வில் இணைய போவதாக தகவல் பரவி வருகிறது. இந்த தகவல் தி.மு.கவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குளித்தலை தொகுதி திமுக எம்.எல்.ஏ. மாணிக்கம் குளித்தலை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த திமுக எம்.எல்.ஏ. ஒருவர் பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டு உள்ளதாகவும், இதற்காக பா.ஜ.க.வை சேர்ந்த சிலர் […]

உத்தரகண்டில் ஆற்றைக் கடக்க முயன்றபோது ஒடும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றது. உத்தரகண்டின் பதேபூர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுகின்றது. இந்நிலையில் பதேபூர் பகுதியில் உள்ள ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இருபுறங்களிலும் தரைப்பாலத்திற்கு மேலே தண்ணீர் ஓடுவதால் வாகன ஓட்டிகளால் சாலையைக் கடக்கமுடியவில்லை. சாலையைக் கடக்க வந்த இருவர் […]

மாராட்டிய மாநிலம் நாசிக்கின் பிம்பால்கான் டோல் கேட்டில் ஒரு பெண் ஊழியர் சுங்க கட்டணம் வசூலிதத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் மத்திய ரிசர்வ் காவல் படை வீரர் ஒருவரின் மனைவி காரில் வந்துள்ளார். அவர் டோல் கேட் கட்டணம் செலுத்த முடியாது என கூறி இருக்கிறார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பறகு அது மோதலாக மாறியுள்ளது. இந்நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் தலைமுடியை பிடித்து இழுத்து சன்டை […]

ஜெயலலிதாவின் உயிலை வெளியிடக் கோரி அவரது நினைவிடத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதிக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை மாங்காட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியரான சவுந்தரராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, தன்னை அழைத்து திருவேற்காடு, மாங்காடு, கரையாஞ்சாவடி, கோயம்பேடு பகுதிகளில் உள்ள நிலங்களில் வீடுகள் ஏற்படுத்தும்படி கூறியதாகவும், அதன் அடிப்படையில் வீடுகள் […]

பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மான், அதிக அளவு குடிபோதையில் தள்ளாடியதால் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டதாக சிரோன்மணி அகாலிதளம் தலைவர் சுக்பிர் சிங் பாதல் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மான், சமீபத்தில் அம்மாநிலத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி சென்றிருந்தார். அவர் அங்கிருந்து டெல்லிக்கு தாமதமாக திரும்பியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதுகுறித்து ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள சிரோன்மணி அகாலிதளம் தலைவர் சுக்பிர் சிங் […]

ஜப்பானில் பெய்து வரும் கடும் புயலால்அங்கு வரலாறு காணாத அளவிற்கு மழை ஏற்பட்டுள்ளதோடு புயலின் தாக்கமும் அதிகரித்துள்ளது. இந்த மழைக்கு ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் ககோஷிமா என்ற நகரில் நிலச்சரிவு ஏற்பட்டது. சாலைகளில் சரிந்து மூடப்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கனமழையைத் தொடர்ந்து சாலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என்பதால் கோடிக்கணக்கான மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு குடியேறும்படி அந்நாட்டு […]

ராணிப்பேட்டை சிப்காட் அடுத்த கொண்டகுப்பம் பகுதியில் குடியிருப்பவர் முனியாண்டி. இவர் டிபன் கடை வைத்துள்ளார். இவரது மகன் முத்து (16) பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய மாமா சந்தோஷ் கடந்த ஏப்ரல் மாதம் ஆன்லைனில் செல்போன் ஒன்றை வாங்கி இருக்கிறார். 12 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய செல்போனை முத்து பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று முத்து செல்போனை பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தனது […]

சம்பளம் கேட்ட கார் ஓட்டுனரை டிராவல்ஸ் நிறுவன பெண் ஊழியர்கள் கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் சுவாமி விவேகானந்தர் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் ராகுல் என்ற தனியார் டிராவல்சில் கார் டிரைவராக பணியாற்றி வருபவர் தினேஷ். இவருக்கு மே மற்றும் ஜூன் மாதத்திற்கான சம்பளப் பணம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், ராய்ப்பூர் விமான நிலையம் அருகே […]

கேரளாவில் நடைபயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அங்கு நடந்த படகு போட்டியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி உற்சாகமாக கலந்து கொண்டார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கி.மீ. தூரம் நடைபயணத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி புதன்கிழமை கன்னியாகுமரியில் தொடங்கினார். களியக்காவிளை அருகே உள்ள தலச்சன் விளையில் கடந்த சனிக்கிழமை தமிழக பயணத்தை நிறைவு செய்தார். அவர் கன்னியாகுமரியில் 4 நாட்களில் 56 கி.மீ. தூரம் கடந்தள்ளார். தமிழகத்தில் […]