fbpx

இரவு நேரங்களில் வீடு புகுந்து முட்டி போட்டுக் கொண்டு மர்ம நபர் ஒருவர், அங்கும் இங்குமாக திருட முயன்ற சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அன்னை சத்யா தெருவில் வசித்து வருபவர் ரங்கநாதன். இவரது வீட்டில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர் ஒருவர் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு செல்போன்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளான். இந்நிலையில், பக்கத்து வீட்டில் […]

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து, ரூ.37,056-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் விலை […]

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 4,858 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 18 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 4,735 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]

இரவில் தூங்கும் நேரத்தில் சக பயணிகளுக்கு தொல்லை தரும் விதத்தில் எந்த செயல்களையும் பயணிகள் செய்யக் கூடாது என இந்திய ரயில்வே எச்சரித்துள்ளது. உலகின் மிகப் பெரிய பயணிகள் சேவை செய்யும் அமைப்பாக இந்திய ரயில்வே உள்ளது. நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகளுக்கு சேவை வழங்கும் இந்திய ரயில்வே, தனது சேவைகளை மேம்படுத்தி அதில் உள்ள பிரச்சனைகளை களைய தொடர் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக முதியோர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட […]

தனது 7 வயதில் இருந்து 2-வது தந்தையின் உறவினர்கள் தன்னை தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்ததை 28 ஆண்டுகள் கழித்து கணவனின் உதவியுடன் பெண் ஒருவர் வெளிக்கொண்டு வந்துள்ளார். முன்னாள் ராணுவ அதிகாரியின் மனைவியான 35 வயதுடைய அப்பெண் 19 வயது வரை தனக்கு நேர்ந்த கொடூரங்கள் குறித்து போலீசிடம் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தின் அலிகார் மாவட்டத்தில் அரங்கேறியிருக்கிறது. முதலில் காவல்துறையை அணுகிய போது புகாரை ஏற்றுக் […]

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் சென்னையில் உள்ள அலுவலகங்களில் Trainee Engineer மற்றும் Project Engineer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு என மொத்தம் 100 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் B.E.., B.Tech தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. […]

ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு SSC CGL தேர்வு 2022க்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்போது SSC CGL தேர்வு 2022 க்கு அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.nic.in இல் விண்ணப்பிக்கலாம். ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 8 கடைசி நாளாகும்.. இருப்பினும், ஆன்லைன் முறையில் அக்டோபர் 09, 2022 வரையும், இ-சலான் மூலமாகவும் 10 அக்டோபர் 2022 வரை விண்ணப்பக் […]

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் EIV 22 என பெயரிடப்பட்டுள்ள, மின்சார இரட்டை அடுக்கு பேருந்து சேவையை மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார் ‌ மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின்கட்கரி அசோக் லேலண்ட் நிறுவனத்தின் EIV 22 என பெயரிடப்பட்டுள்ள, மின்சார இரட்டை அடுக்கு பேருந்து சேவையை மும்பையில் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், நீண்ட காலத்திற்கு உதவும் வகையில், நமது நாட்டின் போக்குவரத்து […]

ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் ஓணம் பம்பர் லாட்டரியில் ரூ.25 கோடி பரிசை வென்றுள்ளார்.. கேரள மாநில லாட்டரித் துறை ஓணம் பம்பர் முடிவுகளை நேற்று அறிவித்தது. லாட்டரியில், முதல் பரிசு சுமார் 25 கோடி ரூபாய் மற்றும் பல சிறிய பரிசுகள் 1,000 ரூபாய் வரை இருந்தது. இதில் ஆட்டோ டிரைவர் ஒருவர் ரூ.25 கோடி பரிசை வென்றுள்ளார்.. வரி மற்றும் பிற கட்டணங்களைக் கழித்த பிறகு, ரூ.25 கோடி […]

ராணி இரண்டாம் எலிசபெத் செப்டம்பர் 8 அன்று ஸ்காட்லாந்தில் தனது 96 வயதில் காலமானார்.. அவரின் மறைவுக்கு பல்வேறு உலக தலைவர்களும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.. மேலும் அவரின் உடலுக்கு ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த அஞ்சலில் செலுத்தி வந்தனர்.. இந்நிலையில் இன்று நடைபெற ராணி எலிசபெத்தி இன் அரசு இறுதிச் சடங்கில் உலகத் தலைவர்கள், அரசியல்வாதிகள், பொது நபர்கள் மற்றும் ஐரோப்பிய அரச குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உலகம் […]