திண்டுக்கல் அருகே பட்டியலினத்தவருக்கு வாடகைக்கு வீடு கிடையாது என்ற வீட்டு உரிமையாளர் பேசிய வீடியோ வைரலாகி வருகின்றது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே நாயக்கனூர் பகுதியில் வாடகைக்கு வீடு தேடி ஒருவர் சென்றுள்ளார். அங்கிருந்து ஒரு வீட்டு வாசலில் நின்று வாடகைக்கு வீடு கேட்டுள்ளார். வீட்டு உரிமையாளரான மூதாட்டி அவரிடம் நீங்கள் என்ன சாதி, ? எனக் கேட்டுள்ளார். நான் என்ன சாதி என கேட்கின்றேன் என நீங்கள் தவறாக […]
இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் புர்ஜ் கலிஃபாவிற்கு கீழே கொண்டாடியுள்ளார். இயக்குநர் விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதிகள், திருமணத்திற்கு பிறகு வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்று தனது 37-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் அவருக்கு ரசிகர்கள், திரையுலகைச் சேர்ந்த பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், நயன்தாராவை திருமணம் செய்து கொண்ட பிறகு கொண்டாடப்படும் முதல் பிறந்தநாள் […]
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் பகுதியில் இருக்கும் பெத்தப்பள்ளி மாவட்டம் ஸ்வர்ண பள்ளியில் வசிக்கும் அகிலா, ஸ்ரீகாந்த் என்பவரை கல்யாணம் செய்து கொண்டார். இந்த கல்யாணத்திற்காக ஸ்ரீகாந்த் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் வரதட்சணை கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து சென்று வேறொரு பெண்ணை கல்யாணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இது பற்றி அறிந்த அகிலா, […]
ஒசூரில் செயல்பட்டு வரும் ஏகே ஸ்டாக் நிறுவனத்தில் பிட்காயின் மோசடி நடைபெற்றதாக எழுந்த புகாரை அடுத்து அந்நிறுவனத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். ஒசூரின் பிரதான பகுதியில் ஏ.கே.ஸ்டாக் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. அருண்குமார் என்பவர் இந்நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இதில் பிட்காயினில் முதலீடு செய்வதால் விரைவில் பணம் இரட்டிப்பாக்கிக் கொடுக்கப்படும் எனக்கூறி பலரிடம் பணம் பெற்றுள்ளனர். இது தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்தன. போச்சம்பள்ளியைச் சேர்ந்த சுதாகர் மற்றும் லட்சக்கணக்கில் […]
சென்னை, அயனாவரம் வசந்தா கார்டன் பகுதியில் குடியிருக்கும் இளம் பெண் (23). இவர் காவல்துறையில் காவலராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை தனது வீட்டில் இருக்கும் பாத்ரூமில் குளித்துள்ளார். அப்போது பாத்ரூமின் பக்கவாட்டு ஜன்னல் வழியாக ஒருவர் எட்டிப் பார்ப்பது அவருக்கு தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், உடனடியாக ஆடைகளை உடுத்திக் கொண்டு வெளியே வந்து பார்த்தபோது, குளியலறையை எட்டிப் பார்த்தது பக்கத்து வீட்டில் […]
தமிழக்தில் அனைத்து பள்ளிகளிலும் வருகின்ற அக்டோபர் மாதத்திலிருந்து வாரந்தோறும் பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி போடப்படுகின்றது. பள்ளி மாணவர்களுக்கு தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் அக்டோபர் மாதத்தில் இருந்து வாரம் தோறும் புதன் கிழமைகளில் தடுப்பூசி போடப்பட உள்ளதாக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் , ’’ அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவே மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் […]
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 61-வது படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் ரஞ்சித் மற்றும் விக்ரம் ஆகியோர் தங்களின் மற்ற படங்களின் பணிகளை முடித்துள்ள நிலையில், விக்ரம் நடிக்கும் 61-வது படத்தை விரைவில் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘பொன்னியின் செல்வன்’, ‘கோப்ரா’ படங்களை அடுத்து, விக்ரம் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக தகவல் […]
விருகம்பாக்கத்தில் திரைப்பட கதாநாயகி கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவன்யூ பகுதியில் வசித்து வந்தவர் பவுலின் ஜெசிகா. இவர் அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்துக் கொண்டு சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி ‘வாய்தா’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இந்நிலையில், நேற்று மதியம் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் […]
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின்நிலையத்தில் அறிவியல் பிரிவு அதிகாரி வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் 50 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றான். நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அறிவியல் பிரிவு அதிகாரியாக பணியாற்றிய அசோகன் கர்நாடக மாநிலத்தில் செயல்பட்டு வரும் கைகா அணுமின்நிலையத்திற்கு பணி மாறுதல் பெற்று 1ம் தேதி கர்நாடகம் சென்றுள்ளார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் திருட்டு சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். கூடங்குளத்தில் […]
சென்னை, தொடக்கக் கல்விக்கு மாவட்ட அளவில் தனியாக பொறுப்பு அலுவலர்கள் இல்லாததால், பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. மேலும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால், அதை தக்கவைக்கவும், பணிகள் தொய்வின்றி நடைபெற தொடக்கப் பள்ளி அளவில் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து சிறுபான்மை பள்ளிகளை கண்காணிக்க பள்ளிகூடங்கள் மற்றும் தொகுதி கல்வி அலுவலர்களின் எண்ணிக்கையில், தேவைக்கேற்ப புதிய வட்டாரக் கல்வி அலுவலர் […]