fbpx

“நிதிச்சுமை இருந்தாலும் பசிச்சுமையை போக்குவதே இலக்கு” என காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் முக.ஸ்டாலின் பேசினார். தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்காக ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அரசுப் பள்ளி மாணவா்களுக்கு காலைச் சிற்றுண்டி அளிக்கும் திட்டம் குறித்த அறிவிப்பை சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ், முதலமைச்சர் முக.ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். அதன்படி, இன்று […]

“நேரம் வரும் போது அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்வேன்” என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்றது. பொதுக்கூட்டம் நடந்த அதேசமயம், அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல்வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் நடைபெற்றது. இதில், உச்சநீதிமன்ற தீர்ப்பில் அதிமுக […]

தில்லு முல்லு கட்சி என்பதை திமுக நிருபித்துள்ளதாக தேதிமுக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியின் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பல நலத்திட்டங்களை அவர் வழங்கினார். அதனை தொடர்ந்து முப்பெரும் விழா மேடையில் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ”தன்னுடைய வாழ்க்கையை சிஸ்டமேட்டிக்காக கொண்டு மக்களுக்காக தன் வாழ்க்கையை அர்பணித்தவர் தான் தலைவர் விஜயகாந்த் […]

நடிகர் அஜித்குமார் அடுத்த ஆண்டு முதல் வெளிநாடுகளில் பைக் பயணம் செல்ல உள்ளார். கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசம் வைத்திருக்கும் நடிகர் அஜித்குமார், பைக் பயணத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். இவர் உலகம் முழுவதும் பைக்கில் பயணம் செய்ய வேண்டும் என திட்டமிட்டிருந்தார். அதற்கான பயணத்தை 2021ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தொடங்கினார். அப்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பயணித்தார். அதை தொடர்ந்து தன்னுடைய 61-வது படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். […]

ரிலையன்ஸ் ஜியோ வரம்பற்ற கால், டேட்டா நன்மைகளுடன் பல ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. அந்த வகையில், தினசரி 1 ஜிபி டேட்டா, 2 ஜிபி தினசரி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா கொண்ட திட்டங்களை வழங்குகிறது.. இந்த திட்டங்கள் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் OTT நன்மைகளையும் வழங்குகின்றன. ஒவ்வொரு நாளும் 3ஜிபி டேட்டா பலன்களை வழங்கும் ஜியோ திட்டங்களின் பட்டியலை பார்க்கலாம். ரூ.419 திட்டம்: […]

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்து ரூ.37,440-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் விலை […]

தமிழகத்தில் முதற்கட்டமாக காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் பள்ளிகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் மாநகராட்சி, நகராட்சி, ஊரகம் (கிராம ஊராட்சி) மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் (1 முதல் 5ஆம் வகுப்பு வரை) படிக்கும் 1,14,095 மாணவ, மாணவிகளுக்கு முதல்கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்தை ரூ.33.56 கோடி செலவில் செயல்படுத்துவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. முதலமைச்சரின் காலை உணவு திட்டம் என்ற பெயரில் இந்த […]

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளன. இதனால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 30,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில். நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 50,000 கன அடியாக இருந்தது. இந்நிலையில், இன்று காலை மேட்டூர் […]

10,11,12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்பு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்விதுறை தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் சரிவர பள்ளிகள் இயங்கவில்லை.. கனமழை காரணமாகவும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன.. இதனால் சனிக்கிழமைகளில் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வந்தது.. எனினும் இந்த ஆண்டு வழக்கம் போல் பள்ளிகள் திறக்கப்பட்டது.. மேலும் இந்த ஆண்டு அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை […]

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் பதக்கம் வென்றதையடுத்து, புதிய சாதனையை படைத்துள்ளார் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் அதிக பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்னும் சாதனையை படைத்துள்ளார். தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் 2022 ஆம் ஆண்டுக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் பதக்கம் வென்றதையடுத்து அவர் இந்த சாதனையை படைத்திருக்கிறார். 2022ஆம் ஆண்டுக்கான உலக […]