தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல் வடபழனி மியூசிக் ஹாலில் இன்று தொடங்கியது. தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். தலைவர், பொதுச்செயலாளர், துணைத்தலைவர், பொருளாளர் உள்ளிட்ட 21 பதவிகளுக்காக இந்த தேர்தல் நடத்தப்படுகிறது. இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், இந்த ஆண்டுக்கான தேர்தல் செப்டம்பர் 11ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, […]
இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமியுடன் பழகி, 60 சவரன் நகைகளை மிரட்டி வாங்கியதாக இளைஞர் மீது சிறுமியின் பெற்றோர் பரபரப்பு புகார் அளித்துள்ளனர். மதுரை மாவட்டம் வில்லாபுரத்தில் உள்ள ஹவுசிங் போர்டு காலணி பகுதியைச் சேர்ந்த தம்பதியினரின் 16 வயது சிறுமி, கடந்த 6 மாதங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் மதுரை எம்.கே.புரம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (22) என்பவருடன் பழகி வந்துள்ளார். இருவரும் நேரில் சந்தித்து காதல் ஜோடிகள் போல் சுற்றி […]
வீரயுக நாயகன் வேள்பாரி என்ற வரலாற்று புனைவு நாவலை இயக்குநர் ஷங்கர் திரைப்படமாக எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதில் கதாநாயகனாக சூர்யா நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வார இதழ் ஒன்றில் தொடராக வெளிவந்து ரசிகர்களிடையே பேராதரவு பெற்ற நாவல் வேள்பாரி. இதனை, மதுரை எம்பியும், சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளருமான சு. வெங்கடேசன் எழுதியிருந்தார். பறம்பு மலையை இடமாய் கொண்டு ஆட்சி செய்த குறுநில மன்னர் வேள்பாரி, கடையேழு வள்ளல்களில் ஒருவராக […]
மனைவியின் தங்கையை கடத்திய விவகாரத்தில் கூடலூர் காவல் உதவி ஆய்வாளரை பணிநீக்கம் செய்து கோவை சரக டிஐஜி முத்துசாமி உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் வெங்கடாசலம் (42) என்பவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இந்நிலையில், வெங்கடாசலம் கடந்த 2018இல் கோபி மதுவிலக்கு பிரிவில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தபோது, மனைவியின் தங்கையை திருமணம் முடிக்க வேண்டும் என்ற விபரீத ஆசையில் பல்வேறு திட்டம் தீட்டியுள்ளார். […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 5,076 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 11 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 6,322 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]
‘நான் தானே இங்கு கேப்டன், நீங்களாக முடிவெடுத்து எதற்கு டி.ஆர்.எஸ். கொடுத்தீர்கள்’ என்று அம்பயரை நோக்கி ஆக்ரோஷமாக கேட்டார் பாபர் அசாம். ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 121 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் களமிறங்கிய இலங்கை அணி 17 ஓவர்களில் 5 விக்கெட்களை […]
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Staff Car Driver பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என 19 காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 27 க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். மேலும் பணிக்கு கல்வித்தகுதியாக அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிலையத்தில் விண்ணப்பதாரர்கள் 8- ம் […]
பிரதமரின் வீட்டு வசதி- நகர்ப்புற திட்டமான “அனைவருக்கும் வீடு” இயக்கத்தை 2024, டிசம்பர் 31 வரை தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமரின் வீட்டு வசதி- நகர்ப்புற திட்டமான “அனைவருக்கும் வீடு” இயக்கத்தை 2024, டிசம்பர் 31 வரை தொடர பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று(10.08.2022) நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் அனுமதி அளித்துள்ளது. எனினும், மார்ச் 31, 2022 வரை அனுமதி அளிக்கப்பட்ட 122.69 […]
அண்ணா பிறந்தநாள் முன்னிட்டு மிதிவண்டி போட்டி நடைபெறும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவு சார்பாக தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15ம் நாளினை சிறப்பிக்கும் பொருட்டு மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா விரைவு மிதிவண்டி போட்டிகள் 15.09.2022 அன்று காலை 10.00 மணிக்கு ஸ்ரீ விஜய் வித்யாலயா ஆண்கள்மெட்ரிக் பள்ளி பேருந்து […]
தமிழகத்தில் இன்று மற்றும் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் செப்.14 ஆம் தேதி ஒருசில […]