கல்கத்தாவில் மொபைல் கேமிங் செயலிக்கு எதிராக அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக ரூ.7 கோடிசிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மொபைல் கேமிங் செயலியின் விளம்பரதாரர்களுக்கு எதிரான இந்த விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனை 6 இடங்களில் நடத்தப்பட்டது. ’’இ நக்கட்ஸ் ’’ என்ற மொபைல் கேமிங் செயலியின் விளம்பரதாரர் ஆமீர் கானுக்கு சொந்தமான 6 […]
இயக்குனர் பாரதிராஜாவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். சென்னையில் இயக்குனர் பாரதிராஜா(81) உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்கு பின்னர் நேற்று மாலை வீடு திரும்பினார்.. வயது மூப்பின் காரணமாக நுரையீல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. சிகிச்சை அளித்த பின் அவர் குணமடைந்துவிட்டதாகவும் , வீட்டில் ஓய்வு அவசியம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் […]
திருப்பதி தேவஸ்தனத்தில் வேலை வாங்கித் தருவதாக இளைஞர்களிடம் ரூ.1.20 கோடி பணம் மோசடி செய்த ஊழியரை போலீசார் கைது செய்தனர். திருப்பதி தேவஸ்தனத்தில் வேலை பார்த்து வருபவர் பாலகிருஷ்ணா . இவர் தான் பணியாற்றும் இடத்தில் உயரதிகாரிகளிடம் பேசி வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பறித்துள்ளார். வேலை வரும் என்று பல நாள் காத்திருந்தும் வேலை கிடைக்கவில்லை. பாலகிருஷ்ணனிடம் பணம் கொடுத்த இளைஞர்கள் சென்று பாலகிருஷ்ணனிடம் கேட்டபோது எப்பொழும் […]
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேர்வு தொடர்பான புதிய விதிமுறையை போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது.. போக்குவரத்து ஆணையர் இதுகுறித்து அனைத்து சரக அலுவலர்கள், அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் அனைத்து மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார்.. அதில் “ போக்குவரத்து ஆணையர் தலைமையில் கடந்த மாதம் 18-ம் தேதி காணொலி வாயிலாக நடந்த ஆய்வு கூட்டத்தி வழங்கிய அறிவுரையின் படி அனைத்து ஓட்டுநர் உரிம தேர்வுகளும் கணினியில் […]
மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பின் மீது மின்னல் தாக்கும் வீடியோ வைரலாகி வருகின்றது. மும்பை அமாச்சியில் ஷிம்பொலி என்ற பகுதியில் நெமிநாத் கட்டிடம் உள்ளது. நேற்று பெய்த கனமழையால் இடி மின்னல் தாக்கியது. நேற்று பெய்த அதிகன மழையால் போக்குவரத்து , ரயில்வே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பல அடி உயரத்தில் உள்ள கட்டிடத்தை மின்னல் தாக்கியதும் எந்த சேதாரமும் ஏற்பட வில்லை. மின்னல் தடுப்பு கருவியுடன் இந்த கட்டிடத்தின் அமைப்பு […]
மகாராஷ்டிராவில் நடைபெற்ற விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியில் நேற்று ஒரு நாளில் பல்வேறு இடங்களில் 20 பேர் பலியானதாக காவல்துறை அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. மஹாராஷ்டிராவில் 10-வது நாளான நேற்று விநாயகர் சிலை கரைக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்வேறு இடங்களில் பல்வேறு விபத்துக்கள் நடந்துள்ளன. கடந்த 31ம் தேதி முதல் தொடங்கிய விநாயகர் சதுர்த்தி நேற்றுடன் 10 நாட்கள் நிறைவடைந்தது. இதையடுத்து விநாயகர் சிலைகளை லாரி, டிராக்டர்களின் […]
அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை, அதிகரித்து வரும் மாசுபாடு, ஆகியவை காரணமாக அதிகமான மக்கள் மின்சார கார்களை வாங்க விரும்புகின்றனர்.. இதன் காரணமாக மின்சார கார் உற்பத்தி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பல புதிய வசதிகளுடன் கூடிய கார்களை அறிமுகம் செய்து வருகின்றனர்.. அந்த வகையில், ஜெர்மனியை சேர்ந்த சோனோ மோட்டார்ஸ் நிறுவனம் சூரிய ஒளியில் சார்ஜ் செய்யும் மின்சாரக் காரை அறிமுகம் செய்ய உள்ளது.. […]
தட்சிண கன்னடா மாவட்ட மங்களூருவை சேர்ந்தவர் ஜெகநாத் ஷெட்டி. பாஜகவை சேர்ந்த இவர் ஆர்.ஆர்.எஸ்.சிலும் உறுப்பினராக இருக்கிறார். மேலும் சொந்தமாக தங்கநகைகள் விற்பனை செய்து வருகிறார். கடந்த மாதம் மண்டியாவிற்கு வியாபார விஷயமாக சென்ற இவரை சிலர் மைசூருவிற்கு கடத்தி சென்று அங்கு தனியார் ஹோட்டலுக்கு அழைத்து சென்று இளம் பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போல சிலர் வீடியோ எடுத்ததாக கூறப்பட்டது. மேலும் அந்த கும்பல் ஜெகநாத் ஷெட்டி இளம் […]
உத்திரபிரதேத்தில் நாக்கை தனியாக துண்டித்து இளைஞர் ஒருவர் காணிக்கை செலுத்த கோயிலுக்கு வந்த சம்வத்தால் பரபரப்பு ஏற்பட்டது. உத்திரபிரதேச மாநிலத்தில் கவுஷாம்பியில் மா ஷீட்லா என்ற கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு இன்று காலை வந்த சம்பத் (38 ) இளைஞர் ஒருவர் தனது நாக்கை துண்டித்து கொண்டு வந்து அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தினார். முன்னதாக அவர் தனது மனைவி மன்னோ தேவியுடன் கோயில் அருகே உள்ள கங்கா ஆற்றில் மூழ்கி […]
டிஜிட்டல் தொழில்நுட்பம் அரசு வளர்ச்சியடைந்துள்ள இந்த நேரத்தில், தனிநபர் கடன்களைப் பெறுவதும் எளிமையாகிவிட்டது.. முழு செயல்முறையும் டிஜிட்டல் மயமாக்கலுக்கு தனிநபர் கடன்களை இப்போது 24-48 மணிநேரத்திற்குள் பெறலாம்.. வட்டி விகிதங்கள் மற்றும் சிறந்த தனிநபர் கடனுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது மற்றும் பெறுவது போன்ற தகவல்களைத் தேடுவதற்கு நீங்கள் வங்கியிலிருந்து வங்கிக்குச் செல்ல வேண்டியதில்லை. நீங்கள் ஆன்லைனில் சிறந்த தனிநபர் கடன்களைத் தேடி விண்ணப்பிக்கலாம். உங்கள் ஆதார் அட்டையை பயன்படுத்தி உங்கள் […]