சென்னையில் கர்ப்பிணி ஒருவர் சென்ற ஆட்டோவை வழிமறித்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஒருவர் அபராதம் செலுத்தக்கோரி ஆட்டோ ஓட்டுனரிடம் தடாலடியாக பேசியது வைரலாகி வருகின்றது. சென்னை பெரம்பூரில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இரவு12 மணி அளவில் ஆட்டோ ஒன்றை செம்பியம் போக்குவரத்து எஸ்.ஐ. பால முரளி என்பவர் வழிமறித்துள்ளார். ’’நோ , என்ட்ரியில் வந்ததற்காக ரூ.1500 எடு ’’ என போலீசார் ஓட்டுனரை கேட்டுள்ளார். நோ […]
நடப்பு சம்பா பருவத்தில் சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளதால் 1 கோடி முதல் 1.2 கோடி டன் வரை அரிசி உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே உள்நாட்டில் பற்றாக்குறையை தடுக்க மற்றும் விலை உயர்வை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் பாசுமதி அரிசியை தவிர மற்றும் புழுங்கல் அரிசி தவிர அரிசிகளின் ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் வகையில் 20 சதவீத ஏற்றுமதி வரி […]
பெரும்பாலான நடிகைகள் தங்கள் கெரியர் பாதிக்கக்கூடும் என்பதால் தங்கள் திருமணத்தை தள்ளிப்போட்டுக் கொண்டே வருகின்றனர்.. 30 வயதை தாண்டியும் பல நடிகைகள் திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளனர்.. ஒரு சில நடிகைகள் மார்க்கெட் குறைந்ததும் தாமதமாக திருமணம் செய்து கொள்கின்றனர்.. இன்னும் ஒரு சில நடிகைகள் திருமணம் செய்து கொள்ளாமலே உள்ளனர்.. அந்த வகையில் பிரபல நடிகை தபு 51 ஆகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.. 1982-ம் ஆண்டில் […]
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கீழபுதூரில் திருமணத்திற்கு பின்னர் கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டும் என நண்பர்கள் ஒப்பந்தம் போட்டு திருமணம் நடைபெற்றுள்ளது. மதுரையைச் சேர்ந்த ஹரிபிரசாத் என்பவருக்கும் , தேனியைச் சேர்ந்த பூஜா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. தேனி மாவட்டம் தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக உள்ளார் ஹரிபிரசாத் . திருமணம் நடைபெற்ற பிறகு மணப்பெண் மாறிவிடக் கூடும் என நினைத்த ஹரிபிரசாத்தின் நண்பர்கள் திருமணத்திற்கு பின்னர் விடுமுறை நாட்களில் […]
சென்னையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;- நீட் தேர்வை பொறுத்தவரை பாஜகவுக்கு அரசியல் செய்ய வேண்டிய நோக்கம் இல்லை. நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு நல்லது. குறிப்பாக பின்தங்கிய பகுதிகளில் இருந்து நீட் தேர்வின் மூலம் மருத்துவம் படிக்கின்றனர். தமிழகத்தில் ஆரம்ப காலங்களில் நீட் தேர்வால் பிரச்னை இருந்தது உண்மை தான். காரணம், தமிழ் நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வந்த பாடத்திட்டத்திற்கும், நீட் தேர்வுக்கு […]
தமிழக மின்வாரியத்தின் கோரிக்கையை ஏற்று மின் கட்டண உயர்வுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 2026-27 ஆம் வருடம் வரை புதிய கட்டண உயர்வு அமலில் இருக்கும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கடந்த எட்டுவருடங்களுக்கு பிறகு தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் முதல் 100 யூனிட் […]
கிருஷ்ணகிரியில் ஒரு ரூபாய்க்கு புடவை தருவதாக வெளியிடப்பட்ட அறிவிப்பையடுத்து பெண்கள் முந்தியடித்துக்கொண்டு சென்று புடவை வாங்கினர். கிருஷ்ணகிரியில் ஜவுளிக்கடை ஒன்று தள்ளுபடி விலையில் ஒரு ரூபாய்க்கு புடவை தருவதாக அறிவித்தது. இதனால் கடை திறப்பதற்கு முன்பாகவே அதிகாலையில் இருந்து பெண்கள் காத்திருந்தனர். காலையில் கடையை திறந்த உடனே புடவையை வாங்கிவிட வேண்டும் என போட்டி போட்டுக் கொண்டு முந்தியடித்தனர். ஜவுளிக்கடையின் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த சலுகை விலை […]
பொன்னியின் நாவலை படமாக எடுக்க வேண்டும் என்று ஆசைப்படாத திரைப் பிரபலங்களே இல்லை என்று கூட சொல்லலாம். எம்.ஜி.ஆர்., பாரதிராஜா, கமல்ஹாசன், மணி ரத்னம் என பல திரையுலக ஜாம்பவான்கள் பொன்னியின் செல்வனை படமாக்க வேண்டும் என்று விரும்பினர். ஆனால் பலருக்கும் அது நிறைவேறாத கனவாகவே மாறிவிட்டது. இந்நிலையில் பல முயற்சிகளுக்கு பிறகு, மணிரத்னம் தனது கனவுப்படமான பொன்னியின் செல்வன் படத்தை 2 பாகங்களாக இயக்கி வருகிறார்.. சோழர்களின் வரலாற்றை […]
புதுடெல்லி, இந்திய விமான போக்குவரத்து கழகத்தில் பல்வேறு காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்நிலையில் மொத்தம் 156 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த காலி பணியிடங்களுக்கான விண்ணப்பிக்கும் நடைமுறை ஆரம்பித்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதற்கான அதிகாரப்பூர்வ, aai.aero என்ற இணையதளத்தில், விண்ணப்பிக்கலாம்.இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30-ஆம் தேதியாகும். மொத்த காலி பணியிடங்கள்: 156 இளநிலை உதவி (தீயணைப்பு பிரிவு): 132இளநிலை உதவி (அலுவலகம்): […]
நாகை அருகே கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 4 மீனவர்களை மற்றொரு விசைப்படகில் வந்தவர்கள் காப்பாற்றினர். … நாகை மாவட்டம் கீச்சங்குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் ஞானபிரகாசம் , ராஜகுமார் , செண்பகம் , மனோ. இவர்கள் விசைப்படகு ஒன்றில் நாகை அருகே மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது திடீரென விசைப்படகில் ஓட்டை ஏற்பட்டு தண்ணீர் விசைப்படகிற்குள் சென்றது. அதிர்ச்சியடைந்த மீனவர்கள் ஓட்டையை அடைக்க முயன்றனர் . ஆனால் முடியவில்லை தண்ணீர் விசைப்படகிற்குள் புகுந்து படகு […]