fbpx

தனது வகுப்பில் படிக்கும் சிறுவனை மிரட்டி மசாஜ் செய்ய வைத்த உதவி ஆசிரியையின் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியில் உள்ள போகாரி தொடக்கப் பள்ளியில் ஊர்மிளா சிங் என்பவர் உதவி ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். இவர், தனது வகுப்பில் படிக்கும் சிறுவன் ஒருவனை அழைத்து, ”எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது. அதனால், என்னுடைய கைகளைப் பிடித்துவிடு” என மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அந்தச் […]

’வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்கள் தமிழகத்தில் பயிற்சி பெற வெறும் ரூ.30 ஆயிரம் கட்டினால் போதும்’ என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் 97 சதவீதம் பேர் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இரண்டாம் தவணை தடுப்பூசியை பொறுத்தவரை 85.80 சதவீதம் பேர் செலுத்தியுள்ளனர். அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இரண்டு வாரத்திற்கு ஒரு […]

சென்னையில் 47 வயதுடைய அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கூலி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் மாதத்திற்கு ஒரு முறை அரியலூரில் உள்ள அவருடைய வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். கடந்த 2020-ஆம் வருடம் பிப்ரவரி மாதம் வீட்டிற்கு வந்தபோது தனது மனைவி மற்றும் மகன், மகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரின் மகள் திடீரென அலறி அழுவதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி தனது மகளிடம் விசாரித்தபோது தந்தை […]

மும்பை காவல்துறையினர் எச்சரிக்கை செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் 140 என்று தொடங்கும் மோபைல் எண்களில் இருந்து அழைப்பு வந்தால் அந்த அழைப்பை எடுக்காதீர்கள், அந்த அழைப்பை எடுத்து பேசினால் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் பறிபோகும், எனவே எச்சரிக்கையாக இருங்கள், என்று காவல்துறையினர் கூறுகின்றனர். மும்பையில் உள்ள சாலையில் காவல்துறையினர் நின்ற படியும், ரோந்து வாகனங்களில் சென்ற படியும் […]

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரை கண்டித்து, தேர்வுத்தாள் திருத்தும் பணியை நிறுத்தப்பட்டுள்ளதால், மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளரும், வேதியியல் துறைத் தலைவருமான கோபி மீது, ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, நேற்று முன்தினம், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் […]

கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் தற்போதைக்கு எந்த கருத்தும் கூற முடியாது என்றும் அந்த சம்பவம் தொடர்பாக மனுக்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மனித உரிமை ஆணையத்தின் தலைவர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் கடந்த ஏப்ரல் 1997இல் தொடங்கப்பட்டது. அதன் வெள்ளி விழா ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெறுகிறது. முதலமைச்சர், தேசிய மனித உரிமை ஆணையத்தின் […]

வீட்டின் முன்பு சத்தமாக பேசிய வாலிபர்கள் கண்டித்த மரக்கடை உரிமையாளரை அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன் (61). இவர் மரக்கடை வைத்துள்ளார். நேற்றிரவு தனது வீட்டின் முன்பு நின்றுக் கொண்டிருந்தபோது, சுகுமார் (19), கபில் (21), சேவாக் (19), அஜித் (20) ஆகியோர் சத்தமாக பேசிக் கொண்டிருந்துள்ளனர். அந்த வாலிபர்கள் ஆபாச வார்த்தைகளுடன் சத்தமாக பேசியதால், […]

நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அருகே மஞ்சங்குளத்தில் குடியிருக்கும் சுந்தரபாண்டியன் மகன் சாமிதுரை(25). இவர் அவர்களின் சொந்த விவசாய நிலத்தில் விவசாய வேலைகளை செய்து வந்ததுள்ளார். இந்நிலையில் இவர் மீது அடிதடி, வழிப்பறி, கொலை என பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. அந்த பகுதியில் ரவுடியாக இருந்துள்ளார். தொடர்ந்து பல்வேறு அடிதடி வழக்குகளில் சிக்கியதால் இவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர் . இதற்கிடையில், கடந்த […]

சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பாக ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு உரிய உத்தரவாதங்களை மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விரைவில் வழங்கிட உரிய நடவடிக்கைகளை எடுக்கக் கோரி, பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், சென்னையில் நடைபெற்ற 44-வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்து கொண்டமைக்கும், இவ்விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவதற்குத் தேவையான அனைத்து உதவிகளை […]

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரே ஊசியை பயன்படுத்தி 39 மாணவர்களுக்குத் தடுப்பூசி போட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. மத்தியப் பிரதேச மாநிலத்தின் சாகர் என்ற பகுதியில் உள்ள ஜெயின் பப்ளிக் பள்ளியில், மாணவர்களுக்கு கோவிட் தடுப்பூசி முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஜிதேந்திரா என்ற சுகாதார பணியாளர் தடுப்பூசி போடும் பணியை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது, அவர் ஒரே ஊசியை வைத்து சுமார் 30 […]