fbpx

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.. கடந்த 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.. மேலும் ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.. இதே போல் இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கி ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டார்.. மேலும் ஓபிஎஸ் இடம் இருந்த எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியும் பறிக்கப்பட்டு, […]

தமிழகத்தில் மீதமுள்ள 6 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கு மத்திய அரசு கைவிரித்த நிலையில், தமிழக அரசு முன்வர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மத்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்படும் 75 மருத்துவக் கல்லூரிகளும் பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது. அதனால், தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசின் நிதியுதவிக்கு வாய்ப்பில்லை […]

சென்னையில் தங்கம் விலை சவரனுக்குரூ.256 அதிகரித்து, ரூ.38,136-க்கு விற்பனையாகிறது…. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.. […]

உலகையே வீட்டிற்குள் முடக்கிப்போட்ட கொரோனா பேரிடர் காலத்தில் குடும்பதிற்கென பிரத்யேகமாக சிறிய ரக விமானம் ஒன்றை தயாரித்து அசத்தியுள்ளார் லண்டனில் வாழும் இந்திய வம்சாவளி இளைஞர். கொரோனா லாக்டவுன் காலத்தில் சுமார் இரண்டு ஆண்டுகள் வீட்டிற்குள் முடங்கிய பலரும், யூடியூப் பார்த்து புது புது உணவுகளை தயாரித்து ருசித்து மகிழ்ந்த போது, லண்டனில் வசித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த அசோக் என்பவர் அதே யூடியூப் உதவியுடன் குடும்பத்திற்காக பிரத்யேகமாக விமானம் […]

கேரளாவில் 3 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக – கேரள எல்லையில் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் போலவே உலக நாடுகளில் குரங்கு அம்மை வைரஸ் நோய் பரவி வருவதால் மக்கள் மத்தியில் மீண்டும் பீதி ஏற்பட்டுள்ளது. இந்த நோயும் இந்தியாவில் பரவியதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். கடந்த 14ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த கேரள […]

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியைச் சேர்ந்த பாஜக எம்.பி அனில் ஃபிரோஜியா, நாடாளுமன்றத்துக்கு தனது குடும்பத்தினருடன் பிரதமரை சந்தித்தார்.. அப்போது எம்.பியின் மகளுடனான உரையாடல் மிகவும் சுவாரஸ்யமானதாக மாறியது.. எம்பியின் 5 வயதாகும் மகள் அஹானா ஃபிரோஜியாவிடம் தான் யார் என்று தெரியுமா என்று கேட்டார்.. அதற்கு, “ஆம், நீங்கள் மோடி ஜி என்று எனக்குத் தெரியும். நீங்க தினமும் டிவியில் வருகிறீர்கள் என்று அக்குழந்தை பதில் கூறியது.. இதைத் […]

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 20,577 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 47 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 18,313 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]

நீட் தேர்வுக்கான உத்தேச விடைகளை தேசிய தேர்வு முகமை நாளை வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நீட் நுழைவுத் தேர்வு கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இந்த தேர்வினை நாடு முழுவதும் 18 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். தமிழகத்தில் ஒரு லட்சத்து 42 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர். தேர்வர்கள் உத்தேச விடைகளை பெற வேண்டுமானால் தேசிய தேர்வு முகமை இணையதளத்தை பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. […]

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ்க்கு இடையே நடந்த 3 ஒருநாள் போட்டியில் 3-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை வென்றது. இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள், 5 டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. ஏற்கனவே, 2 ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. மூன்றாவது ஒரு நாள் ஆட்டம், நேற்றிரவு நடைபெற்றது. டிரினிடட்டில் தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் […]

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரிடம் சிபிசிஐடி போலீசார் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர். கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில், பள்ளியின் தாளாளர், செயலாளர் மற்றும் ஆசிரியைகள் என 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை சேலத்தில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர் மாணவி உயிரிழந்தது தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணையை மேற்கொண்டு வந்தனர். […]