கள்ளக்குறிச்சி கலவரத்தின்போது, எந்தெந்த ஹேண்டில்களில் இருந்து தவறான தகவல்கள் பரப்பட்டது என விவரங்கள் கேட்டு மாவட்ட காவல்துறை ட்விட்டர் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் கடந்த 13ஆம் தேதி ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் கடந்த 17ஆம் தேதி வன்முறையாக மாறியது. அப்போது, போராட்டக்காரர்கள் சம்மந்தப்பட்ட பள்ளியில் அத்துமீறி நுழைந்து, பள்ளியில் உள்ள […]
தமிழகத்தில் குரங்கம்மை ஆய்வகம் அமைக்க விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை மத்திய அரசு ஏற்கும் என நம்புவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “முதல்வர் அறிவுறுத்தலின் பேரில் குரங்கம்மை பரவல் குறித்து அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களிலும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மதுரை, கோவை உள்ளிட்ட பன்னாட்டு விமான நிலையங்களில் தொடர்ச்சியாக பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. வெளிநாட்டு பயணிகள் முகங்களிலோ முழங்கைக்கு கீழ் […]
காதல் திருமணம் செய்த இளம் தம்பதியை பெண்ணின் தந்தை வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே வீரப்பட்டி கிராமம் ஆர்.சி தெருவைச் சேர்ந்த முத்துக்குட்டி (50) என்பவரது மகள் ரேஸ்மா (20). இவர், கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், இவர் அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான வடிவேல் என்பவரது மகன் மாணிக்கராஜை (26) காதலித்து வந்துள்ளார். இவர்களது […]
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.37,824-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென […]
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.. கொரோனா பரவத் தொடங்கி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.. ஆனால் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு முழுமையாக கட்டுக்குள் வரவில்லை.. 2வது அலை, 3-வது அலை, 4-வது அலை என அச்சுறுத்திக் கொண்டே தான் இருக்கிறது… இதனால் கொரோனா தொற்று எண்ணிக்கை அவ்வப்போது குறைவதும் மீண்டும் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. மேலும் சராசரியாக 4 மாதங்களுக்கு […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 14,830 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 36 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 18,159 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]
குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து அடுத்தடுத்து 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இதனால், அங்கு சட்டவிரோத மது விற்பனை, கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வருகிறது. அவ்வப்போது இதுபோன்ற கள்ளச்சாராய விற்பனையும் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், அகமதாபாத் மாவட்டம் மற்றும் போட்டட் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. இதனை அருந்திய பலரும் அடுத்தடுத்து மயங்கி […]
’மாணவர்களின் தொடர் மரணங்களைத் தடுக்க தமிழக அரசு விரைந்து செயலாற்ற வேண்டும்’ என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கல்விக்கூடங்களில் அடுத்தடுத்து நிகழும் பெண் குழந்தைகளின் மர்ம மரணங்கள் குறித்த கொடுஞ்செய்திகள் பெரும் பதைபதைப்பையும், மனவலியையும் தருகிறது. கொரோனா தொற்றுக்குப் பிறகான காலக்கட்டத்தில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பெரும் இடைவெளியைக் களையவும், பாடச்சுமைகளால் மாணவப் பிள்ளைகளுக்கு ஏற்படும் மனஅழுத்தங்களைக் குறைக்கவும், […]
ஜூலை 31-க்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை எனில் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. 2021-22 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31, 2022 ஆகும். அதாவது ஐடிஆர் தாக்கல் செய்ய வரி செலுத்துபவர்களுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளது. அதன்படி 2021-22 நிதியாண்டு மற்றும் 2022-23 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி […]
’டெல்லிக்கு சென்ற எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி சுமூக உறவு காட்டிட விரும்பவில்லை’ என திமுக நாளிதழான முரசொலியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முரசொலியில் வெளிவந்த கட்டுரையில், ”அமைச்சர் பெருமக்களுக்கு சம்பிரதாய வணக்கம் என்றும், பிரதமர் மோடியைப் பொறுத்தவரை அதிமுக தரப்பினர் அவரது கிருபை, கடாட்சம் போன்றவை ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இருப்பது போல அவரது சமீபத்திய நடவடிக்கைகள் படம் பிடிக்கின்றன. இல்லையேல் ஆசை, ஆசையாக பிரதமரின் அனுக்கிரகத்தைப் பெற்று விடலாம் என்ற நப்பாசையுடன் […]