fbpx

மதுபானங்களை ஒழித்துவிட்டு கஞ்சா, பாங்கு பயன்படுத்துவதை அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய பாஜக எம்எல்ஏ கிருஷ்ணமூர்த்தி, ”காங்கிரஸ் ஆட்சியில் சத்தீஸ்கர் மாநிலம் முழுவதும் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுக் கிடக்கிறது. எங்குப் பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, வன்முறை போன்ற குற்றங்கள் பெருகி வருகின்றன. பொதுமக்கள் மதுபானங்களை […]

அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கவில்லை என்றும் அவர் இன்றும் அதிமுகவில் தான் உள்ளார் என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூர் டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம், வெல்லமண்டி நடராஜன், குன்னம் இராமச்சந்திரன், தர்மர், பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் புதிய நிர்வாகிகள் நியமிப்பது தொடர்பான ஆலோசிக்கப்பட்டது. […]

அரசியல் கட்சிகள் மற்றும் மாநில அரசுகள், இலவசங்களை வாக்குறுதிகளாக வாக்காளர்களிடம் வழங்குவதை தடுக்க வழி இருக்கிறதா என்பதை கண்டறியுமாறு உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் வாய்மொழியாக கேட்டுள்ளது. அரசியல் கட்சிகள் இலவசங்களை கொடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என அஷிவினி உபாத்யாய் என்பவர் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு, வாக்குகளை பெறுவதற்காக இலவசங்களை திட்டமாக வழங்கும் […]

தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ் தற்போது துரோக யுத்தம் நடத்தி வருவதாகச் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் திமுக அரசை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பேசிய அவர், ”தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம் தற்போது துரோக யுத்தம் நடத்தி வருகிறார். தேனி மாவட்டத்திற்குள் நுழைய முடியுமா? என்று சிலர் சவால் விட்டார்கள். திமுகவின் கைக்கூலியாக மாறி சதித்திட்டம் தீட்டினால் அது […]

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள 15 வயது சிறுமி ஒருவர் அவரது தாய்யுடன் நேற்று பைக்கில் கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. அதனால் அவருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மெதுவாகவே நகர்ந்து கொண்டிருந்தன. இதனால் தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த பைக்கை முந்தி செல்வதற்காக அந்த சிறுமி ஹாரன் அடித்துக கொண்டே இருந்தார். ஆனால் சிறுமிக்கு முன்னாள் பைக்கில் சென்று கொண்டிருந்தவர் வழிவிடவில்லை. […]

பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்1 மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நெல்லை முன்னீர்பள்ளம் அருகே 11ஆம் வகுப்பு மாணவர் சதீஷ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். மாணவன் சதீஷ் தொடர்ந்து செல்போன் பயன்படுத்தி வந்ததால், பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. எனினும் வேறு […]

விருத்தாசலத்தில் 12ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆயியார் மட தெருவைச் சேர்ந்த கோபி என்பவரின் 17 வயது மகள் விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் பிளஸ்2 படித்துவந்தார். இந்நிலையில், இவர் நேற்றிரவு திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, அவரது இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்று வந்தது. இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் போலீசார் […]

திருப்பத்தூர் அருகே உள்ள எலவம்பட்டி ஊராட்சி செல்ரப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் விவேகானந்தன் (58). இவரது மனைவி ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். இந்நிலையில் விவேகானந்தனுங்கு சொந்தமான விவசாய கிணற்றில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியில் உள்ளவர்கள் கூறியதால். அங்கு சென்று கிணற்றில் பார்த்தபோது, 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து உடனே கந்திலி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் கந்திலி காவல்துறையினர் மற்றும் நாட்றம்பள்ளி தீயணைப்பு […]

என்ஜினீயரிங் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பித்து வந்த நிலையில், நாளை மாலையுடன் அவகாசம் முடிகிறது. மாநில அரசு பாடத்திட்டத்தில் படித்த 12ஆம் வகுப்பு மாணவர்கள் உயர் கல்வியில் சேர கடந்த மாதம் முதல் விண்ணப்பித்து வருகின்றனர். கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பிளஸ்-2 தேர்வு முடிவு தாமதம் ஆனதால், அந்த மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக […]

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகில் உள்ள வீரப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் முத்துகுட்டி (50). இவர் விவசாயம் செய்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் முத்துகுட்டி சொந்தமாக வேன், மினி லாரி வாடகைக்கு விட்டு வருகிறார். இவருடைய மகள் ரேஷ்மா (20), கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்து வந்தார். இவர்களது வீட்டுக்கு எதிர்வீட்டில் குடியிருப்பவர் மாணிக்கராஜ் (26). இவர் ஒரு கூலி தொழிலாளி. ரேஷ்மா, மாணிக்கராஜ் இரண்டு பேரும் உறவினர்கள். […]