fbpx

இலவச வாக்குறுதி விவகாரத்தில், மத்திய அரசு ஏன் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க தயங்குகிறது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.. அஸ்வினி உபாத்யாயா என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.. அந்த மனுவில் “ ஏராளமான அரசியல் கட்சிகள் இலவசங்களை வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி அளிக்கின்றன.. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கில் இதுபோன்ற இலவச வாக்குறுதிகளை வழங்குவதாகவும், எனவே இதற்கு தடை விதிக்க […]

ஓபிஎஸ் மகன் தேர்தலில் வென்றால் அரசியலுக்கு முழுக்கு போடுவதாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.. கடந்த 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.. மேலும் ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.. இதே போல் இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கி ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டார்.. மேலும் ஓபிஎஸ் இடம் இருந்த எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியும் […]

சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து, தடையை மீறி பேரணி செல்ல முயன்றதால் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டார்.. நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கு தொடர்பாக சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று பேரணியில் ஈடுபட்டனர்.. காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து […]

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக, பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ மனு அளித்துள்ளது.. கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் கிராமத்தில் உள்ள சக்தி மெட்ரிக்குலேசன் பள்ளியில் பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி சந்தேகத்திற்குரிய முறையில் கடந்த ஜூலை 13 அன்று உயிரிழந்தார். மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் இந்த போராட்டம் கலவரத்தில் முடிந்தது.. போராட்டக்காரர்கள் பள்ளியை சூறையாடியதுடன், மாணவர்களின் […]

தொண்டை பாதிக்கப்பட்டாலும் தொண்டு பாதிக்கப்படக் கூடாது என்பதால், தன்னுடைய பணிகளைத் தொடர்ந்து வருவதாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை வேளச்சேரியில் உள்ள குரு நானக் கல்லூரியின் 50-ஆம் ஆண்டு பொன் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் முக.ஸ்டாலின், அமைச்சர் தா.மோ. அன்பரசன் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். அப்போது பேசிய முதலமைச்சர், ”கொரோனா தொற்றால் தன் தொண்டை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொண்டை பாதிக்கப்பட்டாலும் தொண்டு பாதிக்கப்படக் கூடாது என்பதால், தன்னுடைய […]

டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் ஸ்கை பஸ் எனப்படும் பறக்கும் பேருந்துகள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.. பாஸ்டன் கன்சல்டிங் குரூப் (BCG) சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார்.. அப்போது பேசிய அவர், நாட்டின் தலைநகர் மற்றும் அண்டை மாநிலங்களில் போக்குவரத்து மற்றும் மாசுபாட்டைக் குறைக்கும் முயற்சியாக இந்தியாவில் முதல் […]

கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் சதிக்கும்பலுக்கு துணைபோகும் விதமாக உளவுத்துறையின் நடவடிக்கை இருப்பதாக திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் நடந்த வன்முறை தொடர்பாக செய்தி வெளியிட்ட ஆங்கில ஊடகம் ஒன்று, போராட்டத்தின் பின்னணியில் ஆதிதிராவிடர்கள் உள்ளதாக உளவுத்துறை கூறியதாக தெரிவித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மாணவி கொல்லப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என்பதிலிருந்து திசை திருப்பி பள்ளியைத் தாக்கியது யார்? கொளுத்தியது […]

சென்னை ராயப்பேட்டை காவல்நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம், மாவட்ட செயலாளர், மேலாளர்கள் மீது ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் புகார் அளித்துள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் ராயப்பேட்டை காவல் நிலையத்தில், அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அசல் பத்திரங்கள் மற்றும் 34 ஆயிரம் ரூபாய் ரொக்கம், மேலும் சில ஆவணங்களை காணவில்லை என புகார் அளித்திருந்தார். கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற வன்முறை போது ஓபிஎஸ் […]

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைகள் டெண்டர் முறைகேடு வழக்கு ஆகஸ்ட் 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.. எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை உறவினர்கள், நண்பர்களுக்கு சட்டவிரோதமாக வழங்கி ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக கடந்த 2018ஆம் ஆண்டு திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி சென்னை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தார். இதையடுத்து, புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை […]

ஜாமீனில் வெளிவந்த ரவுடியை மர்ம நபர்கள் வெட்டிக்கொன்ற சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் கம்மியம்பேட்டை, பிடாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கருப்பு என்கிற கண்ணன் (வயது 24). ரவுடியான இவர் மீது திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி, கஞ்சா புழக்கம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், நேற்று மாலை அவர் கம்மியம்பேட்டை பி.ஆர்.எஸ்.வெங்கடேசன் நகரில் தனது நண்பர்களுடன் நின்று […]