கேரளாவின் 8 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.. கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு மற்றும் கண்ணூர் ஆகிய இடங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது, திருவனந்தபுரம் தவிர மற்ற மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ஏராளமானோர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். […]
அரசு ஊழியர்கள் அனைவருக்கும் உரிய காலத்தில் முறையான பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தகுதியுள்ள அரசு அலுவலர்கள் பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெறுவதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார். ஓய்வுபெறும் நாளன்று செயற்கை காலியிடங்களை ஏற்படுத்தி பதவி உயர்வு மேற்கொள்ளப்படுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே, பதவி உயர்வை பெற்று முழு சேவை செய்யாமலேயே பணப் […]
சமையல் எண்ணெய்களின் விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உணவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகத்துடனான சந்திப்புக்குப் பிறகு, சமையல் எண்ணெய் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகளாவிய சமையல் எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதால், சமையல் எண்ணெய்களின் விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக அமைச்சகம் கருதுகிறது. இந்தியாவின் வருடாந்திர சமையல் எண்ணெய் இறக்குமதி கிட்டத்தட்ட 13-14 மில்லியன் டன் (MT) […]
விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ள நிலையில் டெல்லியில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது…. வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கம், விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து காங்கிரஸ் இன்று நாடு தழுவிய போராட்டம் நடத்தவுள்ளது. இதனையடுத்து டெல்லியில் உள்ள அக்பர் சாலை மற்றும் பிற இடங்களில் தடுப்புகள் போடப்பட்டுள்ளன, மேலும் கட்சி அலுவலகம் அருகே […]
யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் PO பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கியில் PO பணிக்கு என 2094 காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 30 குறைந்தபட்சம் 20 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என குறிபிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு டிகிரி அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட […]
தொடர் மழை காரணமாக நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.. இந்த சூழலில் தமிழகத்தில் நிலவும் மேல் வளிமண்டல சுழற்சி காரணமாக: இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் […]
தேசிய சிறுதொழில் கழகம், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழுள்ள பொதுத்துறை நிறுவனமான சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான இணையவழி பக்கம், நாட்டிலுள்ள சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் செய்வோரின் வணிகத்தை மேம்படுத்த, மின்சந்தைப்படுத்துதல் சேவையை எளிதாக்குகிறது. இணையவழி பதிவு, இணையவழி அங்காடி மேலாண்மை, காட்சிப்படுத்தப்படும் பொருள்கள், சேவைகள், வணிக வர்த்தகத் தகவல்கள், ஒப்பந்த தகவல்கள் அளித்தல் போன்றவை இணைய பக்கத்தின் முக்கிய சேவைகளாகும். மேலும், காதி மற்றும் […]
தாய்லாந்தில் இரவு விடுதி ஒன்றில் நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.. தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கின் தென்கிழக்கே சோன்புரி மாகாணத்தில் உள்ள இரவு விடுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 35 பேர் காயமடைந்துள்ளனர் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சத்தாஹிப் மாவட்டத்தில் உள்ள மவுண்டன் பி இரவு விடுதியில் அதிகாலை 1:00 மணிக்கு (1800 ஜிஎம்டி வியாழன்) தீ […]
குஜராத்தில் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தையை, விவசாயி ஒருவர் உயிருடன் மீட்டுள்ளார். குஜராத் மாநிலம், சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள கம்போய் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. அந்த கிராமத்தில் விவசாயி வேலை செய்து கொண்டிருந்த போது குழந்தையின் அழுகுரலை கேட்டதை வைத்து குழந்தை புகைக்கப்பட்ட இடத்தை கண்டறிந்துள்ளார்.. அந்த இடத்தை தோண்டி பார்த்த போது குழந்தை உயிருடன் இருந்துள்ளது.. உடனடியாக ஆம்புலன்சை வரவழைத்து அழுது கொண்டிருந்த குழந்தையை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு […]
அக்னிபத் திட்டத்தின் கீழ், ராணுவத்திற்கு அக்னி வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஆள்சேர்ப்பு முகாம், 15, நவம்பர் 2022 முதல் 25, நவம்பர் 2022 வரை வேலூரில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கற்பட்டு ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட புதுச்சேரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இதில் பங்கேற்கலாம். […]