fbpx

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மீண்டும் தொடங்கினால் பெருங்குடி மக்களுக்குச் செய்கின்ற பச்சைத் துரோகமுமாகும் என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவாரூர் மாவட்டம் பெரியகுடியில் உள்ள ஹைட்ரோ கார்பன் கிணற்றிலிருந்து எரிகாற்று எடுப்பதற்கான கலந்தாலோசனை கூட்டம் விரைவில் நடைபெறுமென மாவட்ட நிர்வாகம் அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான’ காவிரிப்படுகை பகுதியில் மீண்டும் ஹைட்ரோ கார்பன் எடுக்க […]

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு கூட்டம் வரும் 15ஆம் தேதி நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். சென்னை வானகரத்தில் கடந்த ஜூன் 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதேநேரத்தில், அதிமுக கட்சியின் தலைமை அலுவலகமான ராயப்பேட்டை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்ளே நுழைந்து முக்கியமான கோப்புகளை எடுத்துச் […]

ஐசிசி டி20 கிரிக்கெட் வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 2ஆவது இடத்தை பிடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி 76 ரன்களை பதிவு செய்ததுடன், ஆட்டநாயகனாகவும் சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் சர்வதேச டி20 பேஸ்ட்மேன்கள் தரவரிசையில் 816 புள்ளிகள் பெற்று 2வது இடத்துக்கு முன்னேறினார். முதலிடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம் 818 புள்ளிகளுடன் […]

பிளஸ்1 மாணவியை திருமண ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் கம்பி எண்ண வைத்துள்ளனர். கோவை மாவட்டம் தடாகத்தை சேர்ந்த மாணவி ஒருவர், அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்1 படித்து வருகிறார். அப்போது, மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் (19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது காதலாக மாறி இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் […]

ஒரு குடும்பத்தில் திருமணமான பெண்கள், திருமணமாகாத பெண்கள் மற்றும் ஆண்கள் எவ்வளவு நகைகளை வீட்டில் வைத்திருக்கலாம் என வருமானவரித்துறை குறிப்பிட்ட வரம்பை நிர்ணயித்துள்ளது. இதுதொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”திருமணமான பெண்கள் 62.5 சவரன் வரையிலான தங்க நகைகளை வீட்டில் வைத்துக்கொள்ளலாம் என்றும் அதே சமயம் திருமணமாகாத பெண்கள் 31.25 சவரன் நகைகளை வைத்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்களை பொறுத்தவரை 12.5 சவரன் தங்கத்தை மட்டுமே வைத்துக்கொள்ள […]

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நிகழ்வுகளை வெளியிட காட்சி ஊடகம் & ஓடிடி நிறுவனங்களுக்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை சென்னை மாமால்லபுரத்தில் நடைபெறவுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு பொதுப்பிரிவில் 189 அணிகள் மற்றும் 154 பெண்கள் அணிகளும் பதிவு செய்தனர். போட்டிக்கு மொத்தமாக 187 நாடுகளில் இருந்து பதிவு செய்தனர். ஏறக்குறைய 1500-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் […]

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 19,893 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 53 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 17,897 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]

கே.ஆர்.பி. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி. அணையில் இருந்து வினாடிக்கு 2,800 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, தென்பெண்ணை ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்று நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 51 அடிக்கு […]

காமன்வெல்த் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்தில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல்முறையாக கிரிக்கெட் விளையாட்டுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. அரையிறுதிக்கும் இந்தியா தகுதி பெற்றது. அதன்படி, இந்தியா, ஆஸ்திரேலியா, பார்படாஸ், பாகிஸ்தான், நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. மகளிர் கிரிக்கெட் அணிகள் மட்டும் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளன. முதல் ஆட்டத்தில் […]

பெற்றோரின் எதிர்ப்பால் பேச மறுத்த காதலியின் முகத்தை கத்தியால் கீறிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மயிலாப்பூரை சேர்ந்த மாணவி (21), பள்ளியில் படிக்கும்போது ஐஸ்அவுஸ் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (19) என்பவரை காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்ததால், மாணவியை கண்டித்துள்ளனர். இதனால், வீட்டிற்கு பயந்து காதலன் பிரசாந்திடம் […]