ஆஸ்திரியாவை சேர்ந்த பிரபல மாடல் அழகியும், அழகுக்கலை நிபுணருமான ஸ்டெபானி பைபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை வழக்கில், திடீர் திருப்பமாக ஸ்டெபானியின் முன்னாள் காதலனே அவரைக் கொலை செய்து, உடலை சூட்கேஸில் மறைத்து வைத்துப் புதைத்ததாக வாக்குமூலம் அளித்திருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. கடந்த மாதம் 23ஆம் தேதி மாடல் அழகி ஸ்டெபானி பைபர் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் […]

சேலத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ அர்ஜுனன் சாலை விரிவாகம் தொடர்பாக பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது பெண் ஒருவரை கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜூனனுக்கு சொந்தமாக நிலம் இருக்கும் பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யாமல், பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.. […]

மத்திய ஒளிபரப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது, போலி செய்திகள் மற்றும் டீப் ஃபேக் தொழில்நுட்பத்தால் ஏற்படும் அபாயங்கள் குறித்துக் கவலை தெரிவித்தார். போலி செய்திகள் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குவதால், அவற்றைத் தடுக்கக் கடும் சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவது அவசர தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசுகையில், “அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நாடாளுமன்றத்தில் […]

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த நிர்வாகி செங்கோட்டையன், தற்போது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது பெரும் அரசியல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கட்சி தாவலுக்கு பின்னால், தனது அடுத்தகட்ட நடவடிக்கையாக, பிற கட்சி நிர்வாகிகளை தவெக-வில் இணைக்கும் பணியில் அவர் தீவிரமாக இறங்கியுள்ளார். அதிமுகவின் முன்னாள் தலைவர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கட்சி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. இந்தச் சூழலில், வரும் 2026 […]

ரயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும்போது, உண்மையான பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், இந்தியன் ரயில்வே ஒரு முக்கிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இனி தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஓடிபி கட்டாயம் என்ற புதிய நடைமுறை அமலுக்கு வரவுள்ளது. நீண்ட தூரப் பயணங்களுக்குப் பெரும்பாலான மக்கள் ரயிலையே நம்பி உள்ளனர். குறிப்பாக பண்டிகை காலங்களில், முன்பதிவு தொடங்கிய சில நொடிகளிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிடுகின்றன. […]