தமிழ் திரையுலகின் தன்னிகரற்ற சகாப்தமாக ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக திகழ்ந்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 76-வது பிறந்தநாள் இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் எனப் பல தரப்பினரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த், 1975 ஆம் ஆண்டு ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அன்றிலிருந்து இன்று வரை, சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் […]

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள லாங் ஐலாந்து கடற்கரையில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஒரு விசித்திரமான விலங்கின் உடல் ஒதுங்கியது. இதற்கு “மான்டாக் மான்ஸ்டர்” என்று பெயரிடப்பட்டது. இந்த விலங்கின் தோற்றம் மிகவும் வினோதமாக இருந்ததால், இது ஏதோ அரசு ஆய்வகத்தில் இருந்து தப்பி வந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட உயிரினமாக இருக்கலாம் அல்லது இதுவரை யாரும் பார்த்திராத புதிய விலங்காக இருக்கலாம் எனப் பலவிதமான வதந்திகளும் கற்பனைகளும் […]

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு முறையை திருத்தம் செய்து மேலும் வலுப்படுத்துவதற்கு இந்திய ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ரயில் பயணச் சீட்டு முன்பதிவு முறையை மேம்படுத்த இந்திய ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஐஆர்சிடிசி-யை பயன்படுத்தும் பயனாளர்களின் கணக்குகளை மறு மதிப்பீடு மற்றும் சரிபார்த்தல் மூலம் 2025 ஜனவரி முதல் சந்தேகத்திற்குரிய சுமார் 3.02 கோடி பயனாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டன. தட்கல் […]

உச்ச நீதிமன்ற வலைத்தளத்தில் நீதிபதிகள் சொத்து விவரங்களைப் பதிவேற்றுவது கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய சட்ட ஆணையத்தின் அனைத்து அறிக்கைகளையும் ஆய்வு /செயல்படுத்தலுக்காகவும் விரைவான நடவடிக்கைகளுக்காகவும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் / துறைகளுக்கு சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் அனுப்புகிறது. இந்த அறிக்கைகளை செயல்படுத்துவது குறித்த நிலைப்பாட்டையும் அமைச்சகம் கோருகிறது. மேலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிலுவையில் உள்ள சட்ட ஆணைய அறிக்கைகளின் நிலையைக் காட்டும் அறிக்கையை அமைச்சகம் […]

தமிழ்நாடு முதலமைச்சர், ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பல அரசு பள்ளி கூடங்களுக்கு வகுப்பறைகள் மற்றும்–கலை அரங்கங்களை தன் சொந்த செலவில் கட்டிக் கொடுத்த மக்கள் சேவகரும் – “தென் மாவட்டங்களில் சிறந்தகல்வி நன்கொடையாளர்” விருது பெற்றவருமான கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் டாக்டர் பி.டி.செல்வகுமார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர். தி.மு.க.வில் இணைந்த […]

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், இந்த அவகாசத்தை டிசம்பர் 14-ம் தேதி வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல்சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகள் கடந்த நவம்பர் 4-ம் தேதி தொடங்கின. வீடு வீடாக கணக்கீட்டுப் […]

SLEEP Advances என்ற மதிப்பாய்வு செய்யப்பட்ட விஞ்ஞான இதழில் வெளியான புதிய ஆய்வு, தினமும் 7 மணி நேரத்திற்குக் குறைவாக தூங்கிக் கொண்டிருக்கும் நபர்களின் ஆயுள் குறையலாம் என்று கண்டறிந்துள்ளது.. 2019 முதல் 2025 வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வு, அமெரிக்காவின் 3,000-க்கும் மேற்பட்ட கவுண்டிகளில் இருந்து பெறப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி, மக்களின் தூக்க நேரத்தை அவர்களின் சராசரி ஆயுளுடன் ஒப்பிட்டு பார்த்தது. குறைவான நேரம் தூங்கும் பகுதிகளில், மக்களின் […]