பிரபல பெங்காலி மற்றும் ஒடியா பாடகி நிர்மலா மிஸ்ரா இன்று செட்லா பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பால் காலமானார்.. அவருக்கு வயது 81. பல பெங்காலி மற்றும் ஒடியா படங்களில் பாடல்களை பாடியதன் மூலம் பிரபலமடைந்தவர் நிர்மலா மிஸ்ரா.. இந்த நிலையில், சில காலமாக வயது தொடர்பான நோய்களுடன் போராடி வந்தார். நேற்று நள்ளிரவு 12.05 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அருகிலுள்ள மருத்துவ மனைக்கு அழைத்துச் […]
திண்டுக்கல்லில் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும்போது கிழிந்த 500 ரூபாய் நோட்டுகள் வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இது குறித்து புகார் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல்லில் உள்ள சாலை ரோட்டில் தனியார் வங்கிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் என ஐந்துக்கும் மேற்பட்ட வங்கிகள் இருக்கின்றன. இந்த வங்கிகள் சார்பில் வைக்கப்பட்டுள்ள ஏடிஎம் மையங்களில் பொது மக்கள் பணம் எடுக்கும்போது, ஏடிஎம் மெஷின்களிலிருந்து கிழிந்த 500 ரூபாய் நோட்டுகள் அடிக்கடி வருவதாக பொதுமக்கள் […]
பத்ரா சாவுல் நில மோசடி தொடர்பான முறைகேட்டில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.. மும்பையில் பத்ரா சாவுல் நில மோசடி தொடர்பான முறைகேட்டில் சட்டவிரோத பணிப்பரிமாற்றம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.. இதில் சிவசேனா மூத்த தலைவரும், எம்.பியுமான சஞ்சய் ராவத்துக்கு தொடர்புள்ளதாக கூறப்பட்டது.. ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை 2 முறை சம்மன் அனுப்பியும் சஞ்சய் ராவத் ஆஜராகவில்லை.. நாடாளுமன்ற கூட்டத்தொடர் […]
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.. அதில் “ செமி கண்டக்டர் என்ற இயந்திர சாதன உற்பத்தி ஆலையை தொடங்க வேதாந்தா – பாக்ஸ்கான் கூட்டு நிறுவனம் முடிவு செய்து, இதற்காக பல மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.. ஆனால் தமிழக அரசு விதித்த நிபந்தனைகளால் அந்நிறுவனம் மகாராஷ்டிராவுக்கு சென்றுவிட்டது.. இதனால் […]
தலைநகர் டெல்லியின் இந்திரபுரியில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இளைஞரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த இளைஞர் இந்திரபுரியை சேர்ந்த நிதிஷ் (22) என்று காவல்துறையினருக்கு தெரியவந்தது. இந்த சம்பவம் […]
‘ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்ட் 15 வரை சமூக ஊடகங்களில் ‘இந்திய மூவர்ணக் கொடியை தங்கள் சுயவிவரப் படமாகப் பயன்படுத்த வேண்டும் என்று மக்களை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.. மான் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் 91-வது பதிப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.. அப்போது “ ஆகஸ்ட் 13 முதல் 15 வரை, ‘ஹர் கர் திரங்கா’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நம் வீடுகளில் தேசியக் கொடியை […]
காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது.. 2022-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டி கடந்த 28-ம் தேதி முதல் இங்கிலாந்தில் பர்மிங்காம் நகரில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.. 72 நாடுகள், 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த காமன்வெல்த் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.. இந்த சூழலில் காமன்வெல்த் போட்டியின் பளு தூக்குதலில் இந்தியாவின் ஜெரிமி லால்ரின்னுங்கா தங்கம் வென்றார்.. ஆண்களுக்கான 67 கிலோ எடைப்பிரிவில் மொத்தமாக 300 கில்லோ […]
ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் கணவரின் நண்பருடன் தொடர்பு வைத்திருந்த பெண் ஒருவரை 7 மணிநேரம் மரத்தில் கட்டி வைத்த அவரது கணவர் மற்றும் அவரது உறவினர்கள், மரத்தில் கட்டி வைத்தது மட்டும் அல்லாமல் அவரை அடித்து, துன்புறுத்தி உள்ளனர். இதில், அந்த பெண் சத்தம் போட்டு அலறியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. ஏனெனில், கணவரின் நண்பருடன் அந்த பெண் இருந்துள்ளார். இதனை நேரடியாக பார்த்ததில் […]
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தர்மபுரி, சேலம், நாமக்கல் திருச்சி, பெரம்பலூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் […]
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகில் உள்ள ஆணைகுப்பம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 7-ஆம் வகுப்பு மற்றும் 8-ஆம் வகுப்புக்கு கணக்கு ஆசிரியராக பணிபுரியும் கார்த்தியசாமி தங்களிடம் தவறாக நடந்து கொள்வதாக எட்டுக்கும் மேற்பட்ட மாணவிகள் கடந்த வாரம் தலைமை ஆசிரியர் குலசேகரனிடம் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தியாகராஜன், மாவட்ட கல்வி […]