பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியலில் விவரங்களை சரிசெய்ய வேண்டுமென தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்: நடப்பு கல்வியாண்டுக்கான (2025-26) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, வரும் மார்ச் – ஏப்ரல் மாதம் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வெழுத உள்ள மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிக்கப்பட இருக்கிறது. இதையடுத்து அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் எமிஸ் […]
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் வங்கதேசத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்தியா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஆசிய கோப்பை தொடர் ட்துபாயில் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 4 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் தகுதிபெற்றன. இந்த சுற்றில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்நிலையில், ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றில் துபாயில் நேற்று […]
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில், கடற்கரையோரத்தில் அமைந்துள்ள ஒரு புனித தலம். இங்கு, பக்தர்களுக்கு வழங்கப்படும் பன்னீர் இலை விபூதி, ஒரு சாதாரண பிரசாதமாக மட்டுமல்லாமல், தெய்வீக சக்தியுடன் கூடிய ஒன்றாகவே கருதப்படுகிறது. சிவபெருமானின் புனித சின்னமாக விபூதி கருதப்பட்டாலும், திருச்செந்தூரில் அது பன்னீர் இலையில் வழங்கப்படுவதால், அதற்கு தனிச் சிறப்பு உண்டு. இதன் பின்னணி குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம். சுமார் […]
அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 881 கவுரவ விரிவுரையாளர்கள் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “உயர்கல்வியும், மருத்துவமும் தனது இருகண்களாக போற்றி இந்தியாவுக்கே முன்மாதிரி மாநிலமாக சிறப்பான ஆட்சியை நடத்தி வரும் முதல்வர் ஸ்டாலின், “நான் முதல்வன்”, “புதுமைப்பெண்”, “தமிழ் புதல்வன்”, “முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத் தொகை” போன்ற பல்வேறு […]
காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு லடாக் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக இருக்கிறது. இதற்கிடையே லடாக் பகுதியை இந்திய அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும், மாநில அந்தஸ்து வழங்கக்கோரி காலச்சார ஆர்வலர் சோனம் வாங்சுக் தலைமையில் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் திடீரென நேற்று வன்முறை வெடித்தது. இதில் பலர் உயிரிழந்தனர். போராட்டத்தின் போது, மாணவர்கள் பாதுகாப்புப் […]
கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்யும் கட்சி திமுக என எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று நீலகிரி தொகுதியில் பேசிய அவர்; நாட்டிலேயே ரோல் மாடல் ஆட்சி செய்வது ஸ்டாலின் என்கிறார் உதயநிதி. அதிக கடன் வாங்குவதில், கமிஷன், ஊழலில், வாரிசு அரசியலில், ஸ்டிக்கர் […]
ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் நடைபெற்றுள்ள ஊழல் குறித்து சென்னை உயர் நீதிமன்றக் கண்காணிப்பில் உயர்நிலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளில் ரூ.87 கோடி அளவுக்கு ஊழல்கள் நடைபெற்றிருப்பதாக சமூகத் தணிக்கையில் கண்டறியப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. […]
தைவானின் பிரபலமான சுற்றுலா மையமான கிழக்கு மாகாணமான ஹுவாலியனில் ரகசா சூறாவளி தாக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர். தைவானில் ரகசா சூறாவளியால் 70 செ.மீ. அளவுக்கு மழைப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், தொடர் கடும் மழையால் மலை பகுதியில் அமைந்த நீர்நிலை ஒன்று உடைந்தது. பாலம் ஒன்றும் சேதமடைந்தது. இதனால் ஏரியில் இருந்து 60 மில்லியன் டன் அளவிலான நீர் வெளியேற்றப்பட்டது. ஒலிம்பிக் நீச்சல் குளம் போன்று 36 ஆயிரம் […]
தமிழகத்தில் இன்று முதல் 27-ம் தேதி வரை 3 நாட்களுக்கு கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா – வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலு குறையக்கூடும். இன்று, மத்திய வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். […]
நவம்பர் 3 முதல் Gpay, PhonePE, Paytm போன்ற UPI கட்டணங்களுக்கு NPCI அறிவித்த புதிய மாற்றங்கள் என்ன? என்பது குறித்து அறிந்துகொள்ளுங்கள். இந்திய தேசிய கட்டண கழகம் (NPCI) புதிய செட்டில்மெண்ட் முறைமையை அறிவித்துள்ளது, இது UPI (Unified Payments Interface) பரிவர்த்தனைகளுக்காக தயாரிக்கப்பட்டது. இதில், ஒப்புதல் பெற்ற (authorised) மற்றும் சர்ச்சைக்குள்ளான (disputed) பரிவர்த்தனைகள் தனித்தனி சுழற்சிகளாக (separate cycles) செயல்பட உள்ளன. இந்த புதிய விதிமுறைகள் […]

