fbpx

விவாகரத்தான பெண்கள், முன்னாள் கணவர்கள் மீது வழக்குத் தொடர முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பெண் ஒருவர் விவாகரத்தான 6 மாதங்களுக்கு பிறகு அளித்த புகாரை வைத்து பதிவான வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் கணவர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரித்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அரசியலமைப்பு சட்டத்தின் 142 பிரிவு அதிகாரத்தை பயன்படுத்தி, முன்னாள் கணவருக்கு எதிரான கிரிமினல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. […]

நடிகரும் சினிமா பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசி அவ்வப்போது சர்ச்சைகளை கிளப்பி வருகிறார். ரஜினி, கமல் தொடங்கி விஜய், அஜித், தனுஷ், வடிவேலு போன்ற நடிகர்கள் குறித்தும், த்ரிஷா, நயன்தாரா தொடங்கி கீர்த்தி பாண்டியன், ரேகா நாயர் என பல நடிகைகள் குறித்தும் அருவருக்கத்தக்க வகையில் பேசி வருகிறார். சில பிரபலங்கள் இவரின் பேச்சை கண்டுகொள்ளவில்லை என்றாலும் சிலர் நேரடியாகவே அவரிடம் சண்டைக்கு […]

இந்தியாவின் சந்திரயான்- 3  குழுவுக்கு  அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுக்கான 2024 ஜான் எல்.ஜாக் ஸ்விகர்ட் ஜூனியர் விருது அளிக்கப்பட்டுள்ளது. நிலவை  ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14-ம் தேதி சந்திரயான் 3 என்ற விண்கலத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம் 3 ராக்கெட் மூலம் மதியம் 2.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.  கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி […]

பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர் ஆகியோரது நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க மீண்டும் உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா காலத்தில் தாங்கள் கண்டுபிடித்த மருந்து குறித்த மிக தவறான விளம்பரங்களை மேற்கொண்டதற்காக பதஞ்சலி நிறுவனத்திற்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்; பதஞ்சலி நிறுவனத்திற்கு நாங்கள் தாராளமாக இருக்க விரும்பவில்லை. நீங்கள் […]

சென்னையில் தொடர்ந்து ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்று ஒரு சவரன் ரூ.53,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று புதிய உச்சம் தொட்டிருக்கிறது. அதன்படி ஆபரணத் தங்கம் […]

தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா போட்டியிட அந்நாட்டு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. தென்னாப்பிரிக்க அதிபர் தேர்தல் மே 29 ஆம் தேதி நடைபெற உள்ளது.  தென்னாப்பிரிக்க அதிபராக கடந்த 2009-2019 ஆட்சி செய்த ஜேக்கப் ஸூமா ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கடந்த 2021 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார்.  அவருக்கு 15 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் மருத்துவ பரோலில் […]

இன்றைய அதிநவீன தொழில்நுட்ப உலகில் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவுகின்றன. ஆச்சர்யப்படும் வகையில் சில வீடியோக்கள் இருந்தாலும், சர்ச்சையை தூண்டும் வகையில் சில வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகி வருகின்றன. அந்த வகையில், டெல்லியின் பாலிகா பஜாரில் நடந்ததாக கூறப்படும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், துணிக்கடையில் ஆடை வாங்க சென்ற பெண் ஒருவர் உடைமாற்றுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், அந்த கடையில் […]

இந்து மாணவிகளுடன் பேசியதலால் முஸ்லிம் மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் புனே-வில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புனேவில் உள்ள சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகத்தில் 19 வயதுடைய முஸ்லிம் மாணவர் ஒருவர், இரண்டு இந்து மாணவிகளுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகங்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அந்த மாணவனை தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் மாணவர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், “கடந்த ஞாயிற்றுக்கிழமை […]

மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்காமல் இருப்பது என்ன மாதிரியான மாடல் என்று அண்ணாமலை கேள்வி கேட்டுள்ளார். உடுமலைப்பேட்டை பகுதியில் இருக்கும் மலைவாழ் கிராமம் ஒன்றில், சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணிப் பெண்ணை துணியை கொண்டு டோலி கட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், இந்நிகழ்வை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ”திருப்பூர் […]

ஹெபடைடிஸ் காரணமாக இந்தியாவில் 1.3 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகளாவிய பாதிப்பில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது. உலகில் பல்வேறு வழிகளில் மக்களை பாதிக்கும் நோய்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் பல நோய்கள் நம்மில் இருக்கிறது என்பதே மிக மிக தாமதமாகத்தான் தெரியும். அதன் பாதிப்புகளை ஆரம்பகட்டத்தில் கண்டறிவது என்பது மிக கடினம். அந்த வரிசையில், கல்லீரல் திசுக்களின் வீக்கத்தை ஏற்படுத்தும் […]