ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு ராசிக்கும் ஒரு குறிப்பிட்ட கிரகம் அதிபதியாக இருக்கும். அதேபோல், செல்வத்தின் கடவுளான குபேரருக்கு சில ராசிகள் மிகவும் பிடித்தமானவை என்று கூறப்படுகிறது. அந்த ராசிகளில் பிறந்தவர்கள் வாழ்நாள் முழுவதும் பணப் பிரச்சனையின்றி வாழ்வார்கள் என கூறப்படுகிறது. அந்த வகையில், குபேரரின் சிறப்பு அருளைப் பெறும் அந்த ராசிகளைப் பற்றி இங்கே காணலாம். ரிஷபம் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு, குபேரரின் சிறப்பு அருள் உண்டு. […]

அரசு, அரசு உதவி பள்ளிகளில் பணியாற்றி வரும் முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் சென்னையில் செப்டம்பர் 8-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. சென்னையில் அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் பணிபுரியும் முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்தக் முகாமில், ஆசிரியர்களுக்கு மாணவர்களுடனான கலந்துரையாடல்கள் மற்றும் உயர்நிலை மாணவர்களுக்கான […]

சட்டப்பேரவை அறிவிப்பின் பேரில் துறை நிலையிலான ஓய்வூதியம் பெறும் பணியாளர்களுக்கு இணையாக திருக்கோயில்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு கருணைத்தொகை வழங்க அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில்; திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்று, EPF ஓய்வூதியம் பெறும் திருக்கோயில் பணியாளர்கள் தற்போது ரூ.900/- முதல் ரூ.2,190/- வரை மட்டுமே ஒய்வூதியமாக பெற்று வருகின்றனர். இவர்களுக்கு துறை நிலையிலான ஓய்வூதியம் பெறும் பணியாளர்களுக்கு இணையாக கருணைத் […]

அதிமுக ஆட்சி அமைந்ததும் திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரிக்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப்பயணத்தில் நேற்று மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: மதுரை மாவட்டம் அதிமுக கோட்டை. கடந்த தேர்தலில் சூழ்ச்சி செய்து சில தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. அடுத்த ஆண்டு தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெறும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு […]

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதிய தோல் புற்றுநோய் புண்களை அகற்ற அறுவை சிகிச்சையை செய்து கொண்டதாக அவரது செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை உறுதிப்படுத்தினார். அவர் எதிர்கொண்ட தொடர்ச்சியான உடல்நல சவால்களில் இதுவும் ஒன்று. செய்தித் தொடர்பாளர் கெல்லி ஸ்கல்லி கூறுகையில், ஜோ பைடன் அண்மையில் மோஹ்ஸ்( Mohs) அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். இது ஒரு பொதுவான சிகிச்சை முறையாகும், இதில் தோல் அடுக்குகளை அகற்றி, புற்றுநோய் உயிரணுக்கள் […]

திருநெல்வேலியில் செப்டம்பர் 7-ல் மாநில மாநாட்டில் பங்கேற்க கட்சி நிர்வாகிகளுக்கு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில்: சமீபத்தில் பிஹாரில் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் 65 லட்சம் வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கியிருக்கிறது. இதை எதிர்த்து சமீபத்தில் வாக்காளர் உரிமை பயணத்தை பிஹார் மாநிலத்தில் மக்களின் பேராதரவோடு ராகுல்காந்தி நடத்தியிருக்கிறார். வாக்கு திருட்டு […]

இந்திய அரசு சமீபத்தில் பல அத்தியாவசிய மற்றும் பரவலாகப் பயன்படுத்தப்படும் பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்களில் பெரும் குறைப்பைச் செய்துள்ளது. பொருளாதாரத்தில் தேவையைத் தூண்டும் அதே வேளையில், அன்றாடப் பொருட்களை மலிவானதாக மாற்றுவதன் மூலம் நுகர்வோருக்கு உடனடி நிவாரணம் அளிப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். பெரும்பாலான பொருட்களுக்கு முந்தைய 12% மற்றும் 18% வரி அடுக்குகளிலிருந்து ஒற்றை 5% ஜிஎஸ்டி வரியாகக் குறைக்கப்படுவது இந்த […]

தென்கிழக்கு ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை (செப்டம்பர் 4) 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, மேலும் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், ராவல்பிண்டி மற்றும் பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வா (கேபி) மாகாணங்களின் பல நகரங்களில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. பெஷாவர், மன்சேரா, ஹங்கு, அபோட்டாபாத், ஸ்வாட், அட்டோக் மற்றும் மலாகண்ட் ஆகிய இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது, இதனால் குடியிருப்பாளர்கள் பீதியில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். […]

முஸ்லிம்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான மீலாது நபி இன்று கொண்டாடப்படுகிறது‌. இதை முன்னிட்டு இன்று மதுபான கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முஸ்லிம்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான மீலாது நபி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதி மற்றும் தமிழ்நாடு மதுபான விதிகளின் கீழ் சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக், மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் பார்கள், கிளப்பார்கள், ஓட்டல் பார்கள், மதுபான […]