மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த சைதன்யானந்த சரஸ்வதி மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். டெல்லியில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தின் மாணவிகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததை அடுத்து, பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படும் சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீசார் அவரை தீவிரமாக தேடி வரும் நிலையில் குற்றம் சாட்டப்பட்ட சாமியர்வர் தலைமறைவாகவே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. வசந்த் குஞ்ச் […]

வங்கிக் கணக்கு முதல் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் வரை, அனைத்து முக்கிய சேவைகளுக்கும் ஆதார் அட்டை அவசியமாகிறது. இந்த நிலையில், ஆதார் அட்டையில் திருத்தம் செய்வதற்கான கட்டணங்கள் அக்டோபர் 1-ம் தேதி முதல் உயரப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதாரில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் மாற்றம் போன்ற சேவைகளுக்கான கட்டணம் ரூ.50-லிருந்து ரூ.100-ஆகவும், புகைப்படம் மற்றும் பயோமெட்ரிக் அப்டேட்களுக்கான கட்டணம் ரூ.100-லிருந்து ரூ.125-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஆதார் […]

தூக்கம் என்பது நல்ல ஆரோக்கியத்தின் ஒரு முக்கிய அம்சம் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. தூக்கத்தின் முக்கியத்துவத்தையும், தூக்கமின்மை எவ்வாறு பல சுகாதார நிலைமைகளைத் தூண்டுகிறது என்பதையும் மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.. அதேபோல், நரம்பியல் துறையில் 30+ ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரசாந்த் கட்டகோல் இதுகுறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. மோசமான தூக்கத்தின் ஆபத்துகளுக்கும் மதுவின் விளைவுக்கும் இடையிலான தொடர்பை […]

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, திடீர் உடல்நலக்குறைவு காரணமாகக் கோவை சிங்காநல்லூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு அவருக்கு வயிற்று வலி மற்றும் அஜீரணம் போன்ற உபாதைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை வட்டாரங்கள் அளித்த தகவலின்படி, அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவருக்கு வயிற்று தொடர்பான […]

கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் அருகே சாக்கடையில், அழுகிய நிலையில் சாக்கு மூட்டையில் கிடந்த ஆண் சடலம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த சடலத்தை போலீசார் மீட்டனர். பின்னர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சடலமாக மீட்கப்பட்டது மதுக்கரை, சீரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 40 வயது பாலுசாமி என்பது தெரியவந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் வேலைக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்ற பாலுசாமி, வீடு திரும்பாததால் […]

உலகம் முழுவதும் மல்யுத்தப் போட்டிகள் மிகுந்த ஈடுபாட்டுடன் பார்க்கப்படுகிறது. WWE என்ற உலகளாவிய மல்யுத்த நிறுவனம், திங்கட்கிழமைகளில் WWE RAW மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் WWE SmackDown என வாரந்தோறும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதில் பிரபலமான மல்யுத்த வீரர் ரோமன் ரெய்ன்ஸ். 90-களில் ஹல்க் ஹோகன், ஸ்டோன் கோல்டு, ஜான் சினா ஆகியோருக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருந்தார்களோ, அதே அளவுக்கு உலகம் முழுவதும், குறிப்பாக இந்தியாவில் இவருக்கு மிகப்பெரிய […]