பெற்றோர்களே நோட் பண்ணிக்கோங்க..!! தனியார் பள்ளிகளில் இலவச கல்வி..!! விண்ணப்பிக்க ரெடியா..?

இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 2024-25ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் வரும் 22ஆம் தேதி முதல் அடுத்த மாதம் (மே 20) வரை விண்ணப்பிக்கலாம்.

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 2024-25ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் வரும் 22ஆம் தேதி முதல் அடுத்த மாதம் (மே 20) வரை www.rte.tnschools.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி 2024-2025ஆம் கல்வியாண்டில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் (LKG) சேர்க்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1.8.2020 முதல் 31.7.2021-க்குள் பிறந்திருக்க வேண்டும். பிறப்புச் சான்று, வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவு சாதிச்சான்றிதழ், நலிவடைந்த பிரிவின் கீழ் விண்ணப்பிக்க பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் கீழ் உள்ள வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும். மேலும், முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம் (தனியார் பள்ளிகள்), வட்டாரக்கல்வி அலுவலகங்கள், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வள மைய அலுவலகங்களிலும் கட்டணமின்றி விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டால், சம்பந்தப்பட்ட பள்ளியில் 28.5.2024 அன்று குலுக்கல் நடத்தப்பட்டு சேர்க்கைக்கான குழந்தைகள் தேர்வு செய்யப்படுவார்கள். குழந்தைகளுக்கான கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009-ன் படி சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளின் பெயர் பட்டியல் விண்ணப்ப எண்ணுடன் மே 29ஆம் தேதி இணையதளத்திலும், சம்பந்தப்பட்ட பள்ளியின் தகவல் பலகையிலும் வெளியிடப்படும். சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளை மே 29ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளியில் சேர்க்க வேண்டும். கூடுதல் விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகத்தை (தனியார் பள்ளிகள்) தொடர்பு கொள்ளலாம்” என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Read More : ’இது என்ன ரஜினிக்கு வந்த சோதனை’..!! வாக்குப்பதிவு நிறுத்தம்..!! பெரும் பரபரப்பு..!!

Chella

Next Post

இப்படி ஒரு வசதியா..? உங்கள் வாக்குச்சாவடியில் கூட்டம் இருக்கான்னு தெரிஞ்சிக்கணுமா..?

Fri Apr 19 , 2024
மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கும் நிலையில், தேர்தல் ஆணையம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்தியாவில் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு தொகுதியில் இருந்த வெளியூர் நபர்கள் […]

You May Like