சர்க்கார் புறம்போக்கு, அரசு மனை, ராயத்து வாரி மனை என மாற்றம் செய்து நில உரிமையாளர்கள் பட்ட வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 39, 428 உட்பிரிவுகளில் வகைப்பாடு மாற்ற பணிகளை மேற்கொள்ள அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக வருவாய் வட்டாட்சியர், நத்தம் நிலவரி வட்டாட்சியருக்கும் அதிகாரம் தரப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில், ‘அ’ பதிவேட்டில் கிராம நத்தம், நத்தம், வீடு, வீட்டு மனை என்று நிலங்கள் குறிப்பிடப்படுகின்றன. இந்த நிலங்கள், நகர நில அளவை பதிவேட்டில், சர்க்கார் புறம்போக்கு எனவும், அடங்கலில் நத்தம் என்றும் குறிப்பிடப்படுகின்றன. எனவே, இப்பகுதிகளில் நகர நிலவரித் திட்டம் செயல்படுத்தப்பட்டு, நில உரிமையாளர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.
எனவே, நகர நில அளவை பதிவேடுகளில், சர்க்கார் புறம்போக்கு, அரசு மனை என, குறிப்பிடப்பட்ட நிலங்களுக்கு, நகர நிலவரித் திட்டம் வாயிலாக, பட்டா வழங்க உத்தரவிடப்படுகிறது. இதன்படி, செங்கல்பட்டு, கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவாரூர், கோவை, மதுரை, தேனி, தென்காசி, சிவகங்கை, திண்டுக்கல், வேலுார், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில், 22,076 சர்வே எண்கள், உட்பிரிவுகளுக்கு உட்பட்ட நிலங்களுக்கு, சம்பந்தப்பட்ட கோட்டாட்சியர் அனுமதி பெற்று, நத்தம் நிலவரி திட்டத்தின் கீழ், அதன் உரிமையாளர்களுக்கு பட்டா வழங்கலாம்.
இதேபோன்று, சென்னை, திருவள்ளூர், திருச்சி மாவட்டங்களில், 17,352 சர்வே எண்கள், உட்பிரிவுகளுக்கு உட்பட்ட நிலங்களை, ரயத்துவாரி மனை என வகைப்பாடு மாற்றம் செய்து, நில உரிமையாளர்களுக்கு பட்டா வழங்க, தனி தாசில்தார்களுக்கு உத்தரவிடப்படுகிறது. இதற்காக, நத்தம் நில வரித் திட்ட தனி தாசில்தார் கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து, மாவட்ட ஆட்சியர்கள் சுற்றறிக்கை வெளியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more: பெங்களூருவின் பழைய பெயர் என்ன?. இப்படியொரு வரலாறு இருக்கா?. தெரிஞ்சுக்கோங்க!