Tn Govt: 40 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகளுக்கு ரூ.1,500 ஓய்வூதியம்…!

money 2025 2

கலைஞர் அவர்கள் அரவாணிகளும் இந்தச் சமுதாயத்தின் அங்கம் என்பதால் அவர்களின் நலனை உறுதி செய்வதற்காக, “தமிழ்நாடு அரவாணிகள் நல வாரியம்” 15.4.2008 அன்று தொடங்கப்பட்டு, அரவாணிகளின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தும் வகையில் அவர்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைக் வழங்கினார். அத்துடன் அரவாணிகள் என்னும் பெயரை திருநங்கையர் எனவும் மாற்றி அறிவித்தார்கள். அதன் பிறகு அரவாணிகள் நலவாரியம் திருநங்கையர் நலவாரியம் என வழங்கப்படுகிறது.


முதலமைச்சர் ஸ்டாலின் திருநங்கையர் நலவாரியத்தினை 15 அலுவல்சார் உறுப்பினர்கள் (Official Members), 13(10 திருநங்கைகள், 1 திருநம்பி. 1 இடைபாலினர் மேலும் 1 பெண் உறுப்பினர்) அலுவல் சாரா உறுப்பினர்களுடன் (Non Official Members) 2025-ஆம் ஆண்டில் திருத்தியமைத்தார்கள். திருநங்கைகள் நலவாரியத்தின் வாயிலாக அடையாள அட்டை, குடும்ப அட்டை, வீட்டு மனைப்பட்டா, மருத்துவ காப்பீட்டு அட்டை, தையல் இயந்திரம், சொந்த தொழில் தொடங்கிட மானியம், சுய உதவிக்குழுக்கள் அமைத்துப் பயிற்சி அளித்தல், 40 வயதிற்கு மேற்பட்ட ஏழ்மை நிலையில் உள்ள ஆதரவற்ற திருநங்கைகளுக்கு ஓய்வூதியத் தொகை வழங்குதல் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

திருநங்கைகளுக்கான ஓய்வூதியம்: வாழ்வாதாரச் செலவுகளுக்கு வருமானம் ஈட்ட இயலாத 40 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற ஏழ்மை நிலையிலுள்ள திருநங்கைகளுக்கு மாதந் தோறும் ரூ.1,000 ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்தது அந்த ஓய்வூதியத் தொகையினை முதலமைச்சர் ஸ்டாலின் ரூ.1,500 ஆக உயர்த்தி உத்திரவிட்டார். இத்திட்டத்தின் கீழ், 2022-2023-ஆம் நிதியாண்டிற்கு 1,311 திருநங்கைகளுக்கு ஓய்வூதியமாக ரூ.1.53 கோடியும், 2023-2024-ஆம் நிதியாண்டில் 1,482 திருநங்கைகளுக்கு 5.2.49 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. 2024-2025-ஆம் நிதியாண்டிற்கு ரூ.2.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 1,599 திருநங்கைகளுக்கு 2025 மார்ச் மாதம் வரை ரூ.281.76 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. 2025-2026-நிதியாண்டிற்கு 5.3.00 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதில் 1,760 திருநங்கைகள் பயன்பெற்று வருகின்றனர்.

சுயதொழில் மானியம்: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தைப் பொருளாதார ரீதியாக உயர்த்தி, சமுகத்தில் அவர்களுக்கு அங்கீகாரத்தினை வழங்கும் நோக்கத்துடன். அவர்கள் சொந்தமாகத் தொழில் தொடங்க மானிய வழங்கும் திட்டத்தினை உருவாக்கினார்கள். அதடன் மூலம் அவர்கள் தொடங்கும் தொழிலின் தேவைக்கேற்ப ரூ.50,000/- வரை மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 2021 ஒவ்வொரு ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இதுவரை திருநங்கைகள் சுயதொழில் மானியம் பெற்றுப் பயனடைந்துள்ளனர்.

Read More: தங்க நகைக்கடன் வழங்க கடுமையான கட்டுப்பாடு..‌! முதல்வர் ஸ்டாலின் கடிதம்…!

Vignesh

Next Post

'என் நேரம் முடிந்துவிட்டது'!. அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து வெளியேறினார் எலோன் மஸ்க்!.

Thu May 29 , 2025
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைவர் எலோன் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அரசாங்கத்தில் சிறப்பு அரசு ஊழியராக (SGE) தனது 130 நாள் பதவிக்காலம் முடிவடைவதாக அறிவித்துள்ளார். அரசாங்க செலவினங்களைக் குறைக்க வாய்ப்பு அளித்ததற்காக அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்று அவர் சமூக ஊடக தளமான X இல் பதிவிட்டுள்ளார். டிரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பின் எலான் மஸ்க்கை சிறந்த நிர்வாகத்துக்கான துறை தலைவர் […]
elon musk trump 11zon

You May Like