”மக்களே கவனமா இருங்க”..!! தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!!

கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 754 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், தெலங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதத்தை அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், ”6 மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்திருக்கிறது. எனவே பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்த வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Chella

Next Post

மாவட்ட தோறும் ஆன்லைன் மூலம் நீதிமன்ற விசாரணை....! குழு அமைத்த மத்திய அரசு...!

Fri Mar 17 , 2023
மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களை கணினி மயமாக்கி தொழில்நுட்பத்தின் மூலம் நீதிபெறும் நடைமுறைகளை மேம்படுத்தும் வகையில், ஒருங்கிணைந்த மின் நீதிமன்றங்கள் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்துக்காக உச்சநீதிமன்றமும், சட்ட அமைச்சகமும் மின் குழு ஒன்றை அமைத்துள்ளன. இதன் முதல் கட்டத் திட்டம் 2011 -2015 காலகட்டத்தில் செயல்படுத்தப்பட்டது. இரண்டாம் கட்டத்திட்டம் 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம் 18,735 மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. […]

You May Like