’மக்களே எச்சரிக்கையா இருங்க’..!! பறவை காய்ச்சலுக்கு முதல் உயிரிழப்பு..!! தடுப்பு நடவடிக்கை தீவிரம்..!!

சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இன்று வரை பல நாடுகளில் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. இதில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்நிலையில், சீனாவில் பறவை காய்ச்சலுக்கு (எச்3என்8) முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. குவாங்டாங் மாகாணம் ஜாங்ஷான் நகரை சேர்ந்த 58 வயது பெண்ணுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. கடுமையான நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து, சீனாவில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த பெண் நோய் பாதிப்புக்கு உள்ளாவதற்கு முன்பு ஒரு கோழிப்பண்ணைக்கு சென்றார் என்றும் அங்கு சேகரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் மாதிரிகளில் பறவை காய்ச்சலுக்கு சாதகமான வைரஸ்கள் இருந்ததும் கண்டறியப்பட்டது. இது சீனாவில் பறவை காய்ச்சலுக்கு ஏற்பட்ட முதல் உயிரிழப்பு ஆகும். எச்.3.என்.8. வைரஸ் மனிதர்களுக்கும் பரவுவது கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு உறுதிப்படுத்தப்பட்டது.

Chella

Next Post

“ பசு கோமியத்தை மனிதர்கள் குடிப்பது உடல்நலனுக்கு கேடு..” இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் தகவல்..

Tue Apr 11 , 2023
பசுவின் கோமியம் மனிதர்களின் உடல்நலத்திற்கு உகந்ததல்ல என்று இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது… உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.. தொற்றுநோயியல் துறையின் தலைவராக பணியாற்றும் போஜ் ராஜ் சிங் தலைமையில் பசு மற்றும் எருமை ஆகியவற்றின் கோமியங்கள் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வு முடிவுகள் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.. அதில் “ பசு மற்றும் எருமை கோமியங்களில் மனிதர்களின் உடல்நலனுக்கு கேடு […]

You May Like