Phonepe பயனர்கள் இனி வெளிநாடுகளிலும் UPI மூலம் பணம் செலுத்தலாம்.. புதிய வசதி அறிமுகம்…

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை கணிசமாக அதிகரித்துள்ளன.. இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் மட்டுமின்றி, ஜி பே (G pay), போன் பே (Phonepe) ஆகியவை மூலம் பணம் செலுத்தும் யுபிஐ பரிவர்த்தனை முறை வேகமாக அதிகரித்து வருகிறது.. ஒரு சிறிய பெட்டி கடை முதல் பெரிய ஷாப்பிங் மால்கள் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ முறையில் பணம் செலுத்தி வருகின்றனர்.. க்யூ.ஆர் கோடை ஸ்கேன் செய்வது அல்லது மொபைல் எண் மூலம் நேரடியாக பணம் செலுத்த முடியும்..

இந்நிலையில் போன் பே நிறுவனம் புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.. அதன்படி, போன்பே செயலியில் உள்ள யுபிஐ ஐடியை வெளிநாடுகளிலும் பண பரிவர்த்தனை செய்யலாம்.. இந்த அம்சத்தை அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் ஃபின்டெக் நிறுவனம் என்ற பெருமையை போன் பே நிறுவனம் பெற்றுள்ளது.. எனவே தற்போது வெளிநாடுகளுக்குச் செல்லும் அனைத்து பயனர்களும் தங்கள் UPI மூலம் பிற நாடுகளில் உள்ள வணிகர்களுக்கு பணம் செலுத்தலாம்.

இதற்கு முன்பு வரை வெளிநாட்டு செல்லும் போது சர்வதேச கடன் அல்லது அந்நிய செலாவணி அட்டைகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்து வந்தனர்… ஆனால் போன் பே அறிமுகம் செய்துள்ள புதிய அம்சத்தால், வெளிநாடுகளில் பணம் செலுத்தும் போது பயனரின் இந்திய வங்கிக் கணக்கில் இருந்து வெளிநாட்டு நாணயத்தில் பணம் டெபிட் செய்யப்படும்.

நேபாளம், பூட்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மொரிஷியஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தற்போது போன்பே மூலம் பணம் செலுத்த முடியும்.. போன்பே நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சாரி இதுகுறித்து பேசிய போது, “UPI இன்டர்நேஷனல் உலகின் பிற பகுதிகளுக்கும் UPI அனுபவத்தை வழங்குவதற்கான முதல் முக்கிய படியாகும். இந்த வெளியீடு ஒரு கேம்சேஞ்சராக நிரூபிக்கப்படும்..வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்கள் வெளிநாடுகளில் உள்ள வணிகக் கடைகளில் போன் பே மூலம் பணம் செலுத்தலாம்..” என்று தெரிவித்தார்..

சர்வதேச UPI எவ்வாறு செயல்படும்? போன்பே சமீபத்திய வெளிநாட்டு UPI பரிவர்த்தனை வசதி மூலம், பயனர்கள் வெளிநாட்டு வணிகர்களுக்கு பணம் செலுத்த முடியும். எனவே, வாடிக்கையாளர்கள் வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்வதற்கு முன் அந்நிய செலாவணி அட்டை, சர்வதேச கடன் அட்டைகள் எடுத்து செல்ல வேண்டிய அவசியமில்லை.. இந்தப் புதிய அம்சத்தைப் பயன்படுத்த, போன்பே செயலியில் உள்ள UPI இன்டர்நேஷனலுக்கான வங்கிக் கணக்கை ஒருவர் செயல்படுத்த வேண்டும். பயனர்கள் பயணத்திற்கு முன் அல்லது இருப்பிடத்திலேயே செய்யலாம்.

இந்தியாவின் மிகப்பெரிய பேமெண்ட் செயலியாக உருவெடுத்துள்ள போன்பே கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (UPI) இன் தரவுகளின்படி, இந்தியாவில் மொத்த UPI பரிவர்த்தனைகளில் 49 சதவீதம் யுபிஐ மூலம் செலுத்தப்படுகிறது..

Maha

Next Post

பெண் கைதிக்கு கன்னித்தன்மை சோதனை நடத்துவது, அரசியல் சாசனத்திற்கு எதிரானது : டெல்லி உயர்நீதிமன்றம்

Wed Feb 8 , 2023
நீதிமன்றக் காவலில் அல்லது போலீஸ் காவலில் இருக்கும் பெண் கைதிக்கு கன்னித்தன்மை சோதனை நடத்தப்படுவது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கேரளாவின் கோட்டயத்தில் உள்ள செயின்ட் பயஸ் கான்வென்ட்டில் தங்கி இருந்த அபயா என்ற கன்னியாஸ்திரீ, மார்ச் 27, 1992, அன்று கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.. இந்த வழக்கை விசாரித்த கேரள போலீசார் அபயா தற்கொலை செய்து கொண்டார் என்று கூறி வழக்கை முடித்து […]

You May Like