கஞ்சா போதையில் சுருண்டு கிடந்த பைலட்..!! நடுவானில் தத்தளித்த ஏர் இந்தியா விமானம்..!! அதிர்ச்சியில் அலறிய பயணிகள்..!!

Flight 2026

தாய்லாந்தில் இருந்து கடந்த 4ம் தேதி டில்லி நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் 8 பணிப்பெண்கள் உட்பட, 145 பேர் பயணித்தனர். விமானம் நடு வானில் பறந்த போது, திடீரென பயங்கரமாக குலுங்கியது. அது பறந்து கொண்டிருந்த உயரத்தில் இருந்து திடீரென பல அடி தாழ்வாக பறந்ததால், பயணிகள் பீதி அடைந்தனர்.


பணிப் பெண்கள் சிலர், விமானத்திற்குள் இருந்த பயணிகள் மீது தடுமாறி விழுந்ததில், 17 பேர் காயம் அடைந்தனர். சில மணி நேர பயணத்திற்குப் பின், விமானம் டில்லி வந்தடைந்தது. இச்சம்பவம் தொடர்பாக, விமான விபத்து விசாரணை அமைப்பு தீவிர விசாரணை நடத்தியது.

அதில், விமானத்தை இயக்கிய முதன்மை பைலட் கஞ்சா போதையில் இருந்ததும், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது அவர் மயக்கத்தில் சுருண்டு கிடந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. விமானம் டில்லியில் தரையிறங்கிய போது, முதன்மை பைலட்டை, விமான நிலைய ஊழியர்கள் கைத் தாங்கலாக அழைத்து சென்றதை பார்த்ததாகவும், பயணிகள் சிலர் அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் கிடைத்த திடுக்கிடும் தகவல்களை அடுத்து, இது குறித்து விமானத்தில் பணியில் இருந்த அனைவரிடமும் தீவிர விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Read More : தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாட வேண்டும்..!! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு..!!

Next Post

லடாக்கில் அடுத்தடுத்து நிலநடுக்கம்! 4 மணி நேரத்தில் 2 முறை அதிர்வால் பொதுமக்கள் பீதி!.

Thu Aug 13 , 2026
லடாக்கின் லே பகுதியில் வியாழக்கிழமை அன்று ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த ஒன்றிய பிரதேசத்தில் நான்கு மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால், அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. தேசிய நில அதிர்வு மையத்தின் தகவல்படி, இந்த இரண்டாவது நிலநடுக்கம் காலை 9.54 மணியளவில் ஏற்பட்டது. இது வடக்கே 36.765 அட்சரேகையிலும், […]
earthquake

You May Like