பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து பாராசிட்டமால் தயாரிக்கும் புதிய கண்டுபிடிப்பு..!! – விஞ்ஞானிகள் அசத்தல்

plastic waste 1

பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து காய்ச்சல் மற்றும் தலைவலிக்கான முக்கியமான மருந்தான பாராசிட்டமாலை தயாரிக்க முடியும் என இங்கிலாந்து எடின்பர்க் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புதிய ஆய்வு காட்டுகிறது.


இந்த முயற்சியில் பாலிஎதிலீன் டெரெப்தாலேட் (PET) எனப்படும் பிளாஸ்டிக் வகையிலிருந்து பாராசிட்டமால் தயாரிக்க எஷ்சரிச்சியா கோலி (E.coli) எனும் பாக்டீரியா பயன்படுத்தப்பட்டது. இது உலகளவில் அதிகமாக பயன்படுத்தப்படும் மருந்துகளில் ஒன்றாகும். இந்த கண்டுபிடிப்பின் மூலம், பாராசிட்டமால் தயாரிக்க தேவையான மூலப்பொருளை பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து பெற முடியும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதிய செயல்முறையின் முக்கியத்துவம்:

24 மணி நேரத்துக்குள் முடிவுகள் கிடைக்கும்: இந்த புதிய தொழில்நுட்பம் மூலமாக, பிளாஸ்டிக் கழிவுகளை பாராசிட்டமால் போன்ற மருந்தாக மாற்றும் செயல்முறை மிக வேகமாக நடக்கிறது. பொதுவாக மருந்து உருவாக்கத்தில் பல நாட்கள் அல்லது வாரங்கள் பிடிக்கும். ஆனால் இங்கு, ஒரே நாளில் (24 மணிநேரத்தில்) இந்த மாற்றம் நடந்து முடிகிறது.

சிறிய ஆய்வகத்தில் கூட செய்யக்கூடிய தொழில்நுட்பம்: பெரிய தொழிற்சாலையிலும் மட்டுமல்லாமல், ஒரு சின்ன ஆய்வகத்தில் கூட பயன்படுத்த முடியும். இதனால் பல நிறுவர்கள், கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள் இந்த முறையை சுலபமாக பயன்படுத்த முடியும்.

அறை வெப்பநிலையில் இயங்கும்: பொதுவாக இரசாயன மாற்றங்கள் (chemical reactions) நடக்க அதிகமான வெப்பம் அல்லது தாழ்ந்த குளிர்ச்சி தேவைப்படும். ஆனால் இங்கு, அறை வெப்பம் (Room Temperature) போதுமானது.
அதாவது, கூடுதல் மின்சாரம், எரிபொருள் செலவுகள் எதுவும் தேவையில்லை.
இது சுற்றுச்சூழலுக்கு ஏற்றது மற்றும் செலவைக் குறைக்கும்.

பிளாஸ்டிக் கழிவுகளை மதிப்புமிக்க பொருளாக மாற்றும் புதிய வழி: சாதாரணமாக பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும். ஆனால் இந்த புதிய முறையின் மூலம், அந்த பிளாஸ்டிக் கழிவுகள் பாராசிட்டமால் போன்ற மருந்தாக மாறுகின்றன. இதனால், பிளாஸ்டிக் தாமாகவே அழியாத பிரச்சனையும், மருந்து தயாரிக்க தேவையான மூலப்பொருள் பற்றாக்குறையும் ஒரு நேரத்தில் தீர்கின்றன.

PET பிளாஸ்டிக் என்பது வெறும் கழிவல்ல. நோய்களுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய மருந்துகளாகவும் மாற்றமுடியும், என உயிரி தொழில்நுட்ப நிபுணர் ஸ்டீபன் வாலஸ் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்கு EPSRC மற்றும் எடின்பர்க் இனோவேஷன்ஸ் நிறுவனத்தின் ஆதரவுடன், அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் நிதியுதவி வழங்கியுள்ளது. இந்த கண்டுபிடிப்பு, ‘Nature Chemistry’ என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Read more: இஸ்ரேலுக்காக உளவு பார்த்த 3 பேரை தூக்கிலிட்டது ஈரான்.. போர் நிறுத்தம் அமலுக்கு பிறகு அதிர்ச்சி நடவடிக்கை..!!

Next Post

Axiom-4 Mission : சுபான்ஷு சுக்லா உடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஃபால்கன் 9 ராக்கெட்..

Wed Jun 25 , 2025
இந்தியாவின் ககன்யான் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்வெளி வீரர்களில் ஒருவரான இந்திய விமானப்படையின் (IAF) குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா, இன்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணித்தார்.. மோசமான வானிலை மற்றும் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக பல முறை இந்த திட்டம் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இன்று ஃபால்கன் 9 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.. 1984 ஆம் ஆண்டு அப்போதைய சோவியத் யூனியனின் சல்யுட்-7 விண்வெளி நிலையத்தின் ஒரு பகுதியாக […]
isro 1796326407 sm 1

You May Like