PM Modi | ”என்னைப் பார்த்து அப்படி நினைக்காதீங்க”..!! பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு..!!

இந்தியா டுடே நடத்திய கருத்தரங்கு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது, இது போன்ற கருத்தரங்கு நிகழ்ச்சிகளில் நான் பங்குபெறும்போது, தலைப்பு செய்திகளில் இடம் பெறும் விஷயங்களை நான் பேச வேண்டும் என இங்குள்ளவர்கள் எதிர்பார்ப்பர். ஆனால், நான் திட்டங்களின் கெடு தேதி நோக்கி பணியாற்றும் நபர். தலைப்பு செய்தியில் இடம்பெற பணியாற்றும் நபர் அல்ல. ஆகையால், நான் கூறும் சில விஷயங்கள், ஊடகத்தினருக்கு ஈர்ப்பு இல்லாததாக இருக்கலாம்.

மத்திய அரசின் நலத்திட்டங்களை எல்லாம் விரிவுபடுத்த விரும்புகிறேன். ஆனால், இது குறித்த செய்திகள் ஊடகங்களில் அரிதாக வெளியாகின்றன. ஆனால், இந்த திட்டங்கள் சாதாரண மக்களுடன் தொடர்புடையவை. நாடு முழுவதும் 600 மாவட்டங்களில் தற்போது 1.25 லட்சம் பதிவு செய்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன் ஒருசில ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பற்றி பேசுவது பயன் இல்லை என்று நினைத்த அரசியல் கட்சி, தற்போது ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பற்றி பேசும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது” என்று கூறினார்.

Read More : Robbery: கோடீஸ்வரர் அம்பானி வீட்டிலேயே கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்!… தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் கைது!

Chella

Next Post

Electric Scooter | வாகன ஓட்டிகளே..!! ஏப்ரல் 1ஆம் தேதி முதல் எலக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிரடியாக உயருகிறது..!!

Mon Mar 18 , 2024
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய மானியம் தொடங்க உள்ளதால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை உயரும் என கூறப்படுகிறது. இந்திய அரசால், அண்மையில் அறிவிக்கப்பட்ட Electric Mobility Promotion Scheme 2024 (EMPS) மூலம், எலக்ட்ரிக் பைக்குகளுக்கான ஆரம்ப கொள்முதல் விலை கணிசமாக உயரும் என்று இந்திய முதலீட்டுத் தகவல் மற்றும் கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சி லிமிடெட் (ICRA) தெரிவித்துள்ளது. அதாவது, பெரும்பாலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், பைக்குகளின் விலை சுமார் […]

You May Like