சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த மையம்.. பிரதமர் மோடி திறந்து வைத்தார்..

சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்..

சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று மதியம் ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம், சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.. ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவரை வரவேற்றனர். இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.. ரூ.1260 கோடி செலவில் சர்வதேச தரத்தில் அழகிய வடிவில் கட்டப்பட்டுள்ள முனையத்தை பிரதமர் மோடி ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார்.


மத்திய அமைச்சர்கள், ஜோதிராத்யா சிந்தியா, எல் முருகன் ஆகியோரும் புதிய விமான நிலைய முனையத்தை பார்வையிட்டனர்.. பின்னர் 3.25 மணிக்கு விமான நிலையத்தில் விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்துக்கு சென்ற பிரதமர், அங்கிருந்து கார் மூலம் சென்னை சென்ட்ரல் எம்ஜிஆர் ரயில் நிலையம் சென்று, மாலை 4 மணிக்கு சென்னை – கோவை இடையிலான ‘வந்தே பாரத்’ அதிவிரைவு ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு, சென்னையில் 22 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

RUPA

Next Post

#திருச்சி: பொது தேர்வு பயத்தால் எலி பேஸ்ட் சாப்பிட்ட +2 மாணவிக்கு நேர்ந்த சோகம்!

Sat Apr 8 , 2023
‌திருச்சி மாவட்டம் முசிறியை சார்ந்த பிளஸ் 2 மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாவட்டம் முசிறி பகுதியைச் சார்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மகள் வர்ஷா வயது 20. கடந்த 2020 ஆம் ஆண்டு அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் டூ படித்து வந்த இவர் பாதியிலேயே தனது படிப்பை நிறுத்திவிட்டார். அதன் பிறகு 202-23 ஆம் […]
IMG 20230408 WA0127

You May Like