உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரக்ஷா பந்தன் அன்று ராக்கி கட்டிய 14 வயது தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் அவுரையா மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயது இளைஞன் சுர்ஜித். இவர் கடந்த சனிக்கிழமை தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தங்கை உறவு கொண்ட 14 வயது சிறுமி சுர்ஜித்துக்கு ராக்கி கட்டி விட்டார். பின்னர் இரவு நேரம் மது குடித்துவிட்டு போதையில் வீட்டிற்கு வந்த சுர்ஜித் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்று அவரது உடலை அறையில் தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்து கொண்டது போல நாடகமாடியுள்ளார்.
சிறுமியின் தந்தை, அன்றிரவு வேறு அறையில் தூங்கிக் கொண்டிருந்ததால் எதையும் கவனிக்கவில்லை. மறுநாள் காலை மகளின் உடலை கண்டதும், உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வீட்டின் பல இடங்களில் இரத்தக் கறைகள் இருப்பதை கவனித்து, இது தற்கொலை அல்ல என்பதில் உறுதியடைந்தனர்.
சுர்ஜித் குடும்பத்தினருடன் எப்போதும் இருப்பதை அதிகாரிகள் கவனித்தனர். குடும்பத்தினரிடம் கேள்விகள் கேட்கப்படும் போது, அவர்களுக்குப் பதிலாகத் தானே பேசினார். இதனால் போலீசார் அவர்மீது சந்தேகமடைந்தனர். இதற்கிடையே அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. சுர்ஜித்தை பிடித்து போலீசார் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார் பின்னர் சிறுமையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.