மனைவியின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பார்த்து அரண்டு போன எஸ்.ஐ.. கடைசியில் இப்படி ஆகிடுச்சே..!

whatsapp1 1765719227

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் அருண் (வயது 28). இவர் சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி இளவரசி. இந்த தம்பதிக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. திருமணம் ஆனது முதல் கணவர் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.


இந்த நிலையில் அருண் நேற்று முன் தினம் ஆளுநரின் நிகழ்ச்சிக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மனைவியின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதில் “இனி நான் இருக்க மாட்டேன். குழந்தையை நல்ல முறையில் பார்த்துக் கொள்ளுங்கள்.. நல்லா படிக்க வைங்க.” என பதிவிட்டு இருந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருண், உடனடியாக வீட்டுக்கு சென்றார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த போது மனைவி தூக்கில் தொங்கியபடி கிடந்துள்ளார். உனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

இதையடுத்து அவரது உடல் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இதனிடையே இளவரசியின் உறவினர்கள் அருண் தான் கொலை செய்ததாக மருத்துவமனை வாயிற்பகுதியில் அமர்ந்து மறியல் போராட்டம் செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் இளவரசி தற்கொலை செய்துகொண்டது உறுதியானது. அதன்பின்னர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Read more: தமிழக மக்களுக்கு ஜாக்பாட் செய்தி..!! பொங்கல் பரிசுத் தொகை ரூ.5,000..? வெளியான அதிரடி அறிவிப்பு..!!

English Summary

Police Sub-Inspector’s wife commits suicide near Sattur after posting a status on WhatsApp

Next Post

குளிர்காலத்தில் வெயிட் லாஸ் பண்ண கஷ்டமா இருக்கா? அப்ப கண்டிப்பா இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!

Tue Dec 16 , 2025
When should you eat dinner during the winter? Let's find out at what time you should eat dinner to burn fat and get a healthy sleep.
losing weight 1

You May Like