அதிமுக தொண்டர்களால் உருவான கட்சி; எட்டப்பர்களை வைத்து வீழ்த்த நினைத்தால் நடக்காது.. எடப்பாடி பழனிச்சாமி..!

எட்டப்பர்களை வைத்து அதிமுகவை வீழ்த்த நினைத்தால் அது நடக்காது என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து சென்னை வானகரத்தில் கடந்த 11-ம் தேதி பொதுக்குழு நடைபெற்றது. நடந்த பொதுக்குழுவில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் அங்கு இயற்றப்பட்ட சிறப்பு தீர்மானத்தின் மூலம் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்ல விழாவில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார்.

அவருக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய நம்மிடத்தில் பழனிச்சாமி, எட்டப்பராக இருந்தவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டுவிட்டது. எட்டப்பர்களை வைத்து அதிமுகவை, திமுக வீழ்த்த நினைத்தால் இனி அது நடக்காது. மேலும், அதிமுக தொண்டர்களால் உழைத்து உருவாக்கப்பட்ட கட்சி என்று பேசினார்.

Baskar

Next Post

தீவிரவாத அமைப்பிற்கு ஆள் சேர்த்த குற்றவாளிகள்; நாட்டிற்கு எதிராக போர் தொடுக்க திட்டம்...!

Wed Jul 13 , 2022
கேரளாவில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆட்சேர்ப்பு நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மூன்று பேரும் குற்றவாளிகள் என என்.ஐ.ஏ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கேரள மாநிலம் வலப்பட்டினத்திலிருந்து பதினைந்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை சிரியாவுக்கு அழைத்துச் சென்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்த்ததாக மூன்று பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த கொச்சி என்.ஐ.ஏ நீதிமன்றம் 3 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கியது. மேலும் குற்றவாளிகள் மூன்று […]
வரதட்சணை கேட்காமல் லட்சக்கணக்கில் புரோக்கர் கமிஷன்..!! திருமணம் முடிந்தும் சிங்கிளாக சுத்தும் இளைஞர்..!!

You May Like