கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 17-ஆம் தேதி மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணத்துக்கு நீதி கேட்டு அங்குள்ளவர்கள் போராட்டம் நடத்தியதால் அங்கு பெரும் கலவரம் ஏற்பட்டது. அந்த கலவரத்தில் பள்ளிக்கூடம் சூறையாடப்பட்டது. பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இந்த சம்பவத்தில் காவல்துறையினர் மற்றும் உளவுத்துறை, சரிவர செயல்படவில்லை என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். காவல்துறையினர் திட்டமிட்டு செயல்பட்டிருந்தால், கலவரத்தை தடுத்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று கவர்னர் ஆர்.என்.ரவியை அண்ணாமலை நேரில் சந்தித்து காவல் உயர் அதிகாரிகள் மீது பரபரப்பான புகார்களை கூறியுள்ளார். அவருடன் வி.பி. துரைசாமி, கே.பி.ராமலிங்கம், முருகானந்தம், கார்த்தியாயினி, டாக்டர் சரவணன், தட்சிணாமூர்த்தி ஆகியோரும் உடன் சென்றனர். மேலும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, தமிழக அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசியதாக தெரிகிறது.