நடப்பு 2024-25ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். இதன்மூலம் தொடர்ந்து 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
* தங்கம், வெள்ளிகளுக்கான சுங்கவரி 6% ஆகவும், பிளாட்டினத்திற்கு 6.4% ஆகவும் குறைப்பு.
* தங்கம், வெள்ளி பொருட்களுக்கு 15% ஆக உள்ள இறக்குமதி வரி 6% ஆக குறைக்கப்படுகிறது.
* மக்காத பிளக்ஸ் பேனர்களின் மூலப்பொருள் இறக்குமதி வரி குறைப்பு.
* நேரடி வரி விதிப்பை எளிமைப்படுத்த தொடர்ந்து முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
- * வருமான வரி செலுத்துவோரில் 3ல் 2 பங்கு பேர் புதிய நடைமுறைக்கு மாறியுள்ளனர்.
* ஆன்லைன் வர்த்தகத்திற்கான வரி குறைப்பு.
* இணைய வர்த்தகத்திற்கான TDS குறைக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிப்பு.
* தனிநபர்களுக்கான வருமான வரிச்சலுகையில் நிலையான கழிவு ரூ.15,000இல் இருந்து ரூ.75,000ஆக அதிகரிப்பு.
* புதிய வருமான வரி முறையில் ரூ.3 லட்சம் வரை வரி இல்லை. ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சம் வரை 5% வரி, ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரை 10% வரி, ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சம் வரை 15% வரி, ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 20% வரி விதிக்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
* ஏஞ்சல் வரி விதிப்பு முறை முற்றிலுமாக அகற்றப்படுவதாக அறிவிப்பு. அதாவது, ஸ்டார்ட் அப் நிறுவனம் அதன் சந்தை மதிப்பை விட அதிக முதலீடுகளை பெற்றால், ஏஞ்சல் வரி விதிக்கப்படும். முதலீட்டாளர்களிடம் இருந்து நிதி கோரும் நிறுவனங்கள் ஏஞ்சல் வரி செலுத்த வேண்டும் என்பது நடைமுறை.
Read More : Budget 2024 | பீகார், ஆந்திராவுக்கு ஜாக்பாட்..!! ரூ.41,000 கோடி..!! ஒரே போடாக போட்ட நிர்மலா சீதாராமன்..!!