fbpx

’தொண்டர்களையும், மக்களையும் ஓபிஎஸ் குழப்புகிறார்’..!! – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

”ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் யாரும் சசிகலா பக்கம் செல்லமாட்டார்கள்” என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

காமராஜரின் 48-வது நினைவு தினத்தையொட்டி சென்னையில் உள்ள காமராஜர் நினைவகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கிங் மேக்கராக இருந்தது பல தலைவர்களை உருவாக்கிய பெருமை காமராஜருக்கு உண்டு. தற்போது குழப்பத்தின் உட்சத்தில் திமுக அரசு உள்ளது. திமுக அமைச்சர்களுக்கும் தெளிவு இல்லை. திமுக அரசு மட்டுமல்லாது அரசு அதிகாரிகளும் குழம்பிவிட்ட சூழல் உள்ளது. அமைச்சர்களின் குழப்பங்களை வைத்து அமைச்சர்கள் அலப்பறை என புத்தகமே எழுதலாம். மக்கள் ஏளனம், முகம் சுழிக்கும் அளவுக்கு ஆட்சி உள்ளது.

’தொண்டர்களையும், மக்களையும் ஓபிஎஸ் குழப்புகிறார்’..!! - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ஓ.பன்னீர்செல்வம் தரப்பு திசை திருப்பி தொண்டர்களையும், மக்களையும் குழப்பும் வகையில் செயல்பட்டு வருகிறது. திசை திருப்பும் வேலையை தொண்டர்கள் நம்பமாட்டார்கள்.
ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள், அதிமுக தொண்டர்கள் சசிகலா பக்கம் செல்ல மாட்டார்கள். நீதிமன்ற தீர்ப்பில் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை என்ற வார்த்தை இல்லை” என்றார்.

Chella

Next Post

தொடர் விடுமுறை..!! சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்..!! 2 நாளில் 3.12 லட்சம் பேர் பயணம்..!!

Sun Oct 2 , 2022
கடந்த 2 நாட்களில் மொத்தமாக 3,12,345 பயணிகள் சென்னையில் இருந்து வெளியூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர் காந்தி ஜெயந்தி, சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை என தொடர்ந்து விடுமுறை வருவதால் வெளியூரில் தங்கி வேலை பார்ப்பவர்கள், கல்லூரிகளில் படிப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். இதற்காக சென்னையில் இருந்து நெல்லை, திருச்சி, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. விடுமுறை தொடங்கிவிட்டதால், நேற்று முன்தினம் மாலையே பலரும் தங்கள் […]

You May Like