fbpx

பாதுகாப்பற்றமுறையில் ஜோடோ யாத்திரை ? 4 பேரை மின்சாரம் தாக்கியதால் பரபரப்பு…

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் காங்கிரஸ் கட்சியின் ஜோடோ யாத்திரை பயணத்தில் பாதுகாப்பாற்ற முறையில் ஜோடோ யாத்திரை சென்றதால் 4 பேரை மின்சாரம் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் தற்போது காங்கிரஸ் கட்சியினர் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தலைமை ஏற்று ராகுல்காந்தி நடத்தி வருகின்றார். இன்று ஜோடோ யாத்திரை தொடங்கிய போது சங்கனகல்லு என்ற கிராமத்தில் ராகுல்காந்தி பாதயாத்திரையை தொடங்கினார். தொண்டர்கள் தங்கள் கையில் கட்சிக் கொடியை ஏந்தியவாறு சென்றனர். அப்போது கட்சிக் கொடியை உயர்த்திப்பிடித்து அசைத்தனர். கட்சிக் கொடி இரும்புக் கம்பியில் இருந்தது என்பதால் மின்சார வயரில் பட்டு 4 பேரை தூக்கி வீசியாது.

பதறிப்போன ராகுல்காந்தி : 4 பேர் மின்சாரம் தாக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டதால் காங்கிரஸ் எம்.பியும். முன்னாள் தலைவருமான ராகுல்காந்தி பதறிப்போனார். உடனடியாக தொண்டர்களை ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். ஜோடோ யாத்திரையை பாதியில் நிறுத்திவிட்டு ராகுல்காந்தி மருத்துவமனைக்கு சென்று அனைவருக்கும் ஆறுதல் கூறினார்.அதிர்ஷ்டவசமாக உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவர்கள் கூறிய பின்னரே ராகுல்காந்தி மனம்அமைதியடைந்தது.

நிவாரணம் : படுகாயம் அடைந்த 4 பேருக்கும் தலா ரூ.1 லட்சம் ரூபாயை ராகுல்காந்தி நிவாரணமாக அறிவித்துள்ளார். அவர் பெல்லாரியில் உள்ள தங்கும் இடத்திற்கு சென்ற பின்னர் கூட செல்போனில் கட்சியினரிடம்  அடிக்கடிவிசாரிக் கொண்டே இருந்தார். உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் மருத்துவர்களிடம் அவர் கேட்டுக் கொண்டிருக்கின்றார். இந்த சம்பவம் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.

பாதுகாப்பற்ற முறையில் யாத்திரை : இந்நிலையில் பாதுகாப்பற்ற முறையில் யாத்திரை நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனினும் தனது வலைத்தலப்பக்கத்தில் ராகுல்காந்தி நம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் கூறி உள்ளார்.

Next Post

அமெரிக்க அதிபர் இளம்பெண்ணின் தோளில்கை போட்டு, அருகில் இழுத்து !! என்ன சொன்னார் தெரியுமா??

Sun Oct 16 , 2022
அமெரிக்க அதிபர் ஜோபைடன் பள்ளி மாணவி போல்இருக்கும் சிறுமியை இழுத்து தோளில் கைபோட்டு டேட்டிங் ஆலோசனை கூறியிருக்கின்றார். அமெரிக்காவின் அதிபரான ஜோபைடன் , ’’நீங்கள் 30 வயது ஆகும் வரை எதையும் சீரியதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என கூறுகின்றார். உடனே பின்னால் திரும்பி பார்க்கும் அந்த சிறுமி அசவுகரியமாக உணர்கின்றார். இதை வீடியோ எடுப்பவர்களை தடுக்கும் நோக்கத்தில் அவர் நடந்து கொண்டிருக்கின்றார். இதை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள […]

You May Like