பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம்… 8 யூடியூப் சேனல் மீது ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கோரி வழக்கு…!

jayaraman 2025

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட யூடியூப் சேனல்களிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.


பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பான வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், தங்களை தொடர்புபடுத்தி அவதூறு கருத்துகளை வெளியிட தடை விதிக்க கோரி முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அவரது மகன் பிரவீன் ஜெயராமன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்; பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தங்களை தொடர்பு படுத்தி நக்கீரன், அறன் செய், ஜீவா டுடே, ஜாம்பவான் உள்ளிட்ட 8 யூடியூப் சேனல்கள் அவதூறு கருத்துக்களை வெளியிட்டுள்ளன. அந்த வீடியோக்களை அகற்ற உத்தரவிட வேண்டும் எனவும், 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும். மேலும் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தங்களை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர். இந்த வழக்கு நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனு மீதான விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Read More: குட் நியூஸ்..! போக்குவரத்து ஊழியர்களுக்கு 2023 செப்.1 முதல் அடிப்படை ஊதியத்தில் 6% உயர்த்தி வழங்க ஒப்புதல்…!

Vignesh

Next Post

நாட்டையே உலுக்கிய வழக்கு..!! 300 + சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த மருத்துவர்..!! நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு..!!

Fri May 30 , 2025
நாட்டையே உலுக்கிய ஒரு வழக்கில், ஓய்வுபெற்ற அறுவை சிகிச்சை நிபுணருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் ஜோயல் லே. இவருக்கு வயது 74. இவர் தலைநகர் பாரீசில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவராகவும், தலைமை அறுவை சிகிச்சை நிபுணராகவும் பணியாற்றி வந்தார். இதற்கிடையே, பணியில் இருந்து ஓய்வு பெற்று தனியாக கிளினிக் வைத்தும் நடத்தி வந்தார். இந்நிலையில், ஜோயல் […]
Rape 2025 4

You May Like