Ponmudi | பொன்முடி வழக்கு..!! ஐகோர்ட் தீர்ப்புக்கு தடை..!! உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட வழக்கில் குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

இந்த தீர்ப்பில் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக முன்னாள் அமைச்சர் பொன்முடி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனை நிறுத்திவைத்து இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்ற தீர்ப்புக்கு தடை விதிக்கப்பட்டாலும் அவர் நிரபராதி என நிரூபணம் செய்யப்படாததால், காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட திருக்கோயிலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக முன்னாள் அமைச்சர் பொன்முடியால் தொடர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

Vijay | பள்ளிக்கல்வித்துறையின் பேஸ்புக் பக்கத்தில் ’மாஸ்டர்’ பட காட்சிகள்..!! அதிர்ச்சியில் மாணவர்கள்..!!

Mon Mar 11 , 2024
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் பேஸ்புக் பக்கத்தை மர்ம நபர்கள் முடக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. முகநூல், எக்ஸ், இன்ஸ்டா உள்ளிட்ட சமூகவலைதள பக்கங்களில் பள்ளிக்கல்வித்துறைக்கு பக்கங்கள் துவங்கப்பட்டு, அதில் அரசின் நலத் திட்டங்கள், சாதனை மாணவ – மாணவிகளின் பேட்டிகள், நுழைவுத் தேர்வு, போட்டித் தேர்வுகள் குறித்த விவரங்கள், ஆசிரியர்களின் வீடியோ உள்ளிட்டவை நாள்தோறும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. […]

You May Like